முதுநிலை கல்வி முதலாமாண்டு துவக்கம்
முதுநிலை கல்வி முதலாமாண்டு துவக்கம்
முதுநிலை கல்வி முதலாமாண்டு துவக்கம்
ADDED : செப் 08, 2011 05:30 PM
கோவை: கோவை ரங்கநாதன் பொறியியல் கல்லூரியில் 2011ம் ஆண்டுக்கான எம்.இ., மற்றும் எம்.பி.ஏ., மாணவர்களுக்கான முதுநிலை கல்வி முதலாமாண்டு துவக்க விழா நடந்தது.
கல்லூரி தாளாளர் தமிழரசி முருகேசன் தலைமை வகித்தார். மின்ணணுவியல் மற்றும் தொலை தொடர்பியல் துறை தலைவர் பழனிச்சாமி வரவேற்றார். கல்லூரி முதல்வர் ஆமோஸ் ராபர்ட் ஜெயசந்திரன், கல்லூரி தலைமை செயலாளர் சிவக்குமார் ஆகியோர் பங்கேற்றனர். கல்லூரி நிர்வாக இயக்குனர் பாலசுந்தரம் பேசும்போது, ' கல்வி பயிலும் மாணவர்களிடம் உள்ள ஆக்க சக்தி, அவர்களை சிறந்தவர்களாக உயர்த்துவதோடு; இந்த உலகத்தை மாற்றி அமைக்க கூடிய சக்தியாகவும் மாறும்' என்றார். மேலாண்மை துறைத்தலைவர் ஜோதிலதா நன்றி கூறினார்.


