Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ஆள் இல்லாத வீட்டில் இறந்து கிடந்த வாலிபர்

ஆள் இல்லாத வீட்டில் இறந்து கிடந்த வாலிபர்

ஆள் இல்லாத வீட்டில் இறந்து கிடந்த வாலிபர்

ஆள் இல்லாத வீட்டில் இறந்து கிடந்த வாலிபர்

ADDED : செப் 08, 2011 11:52 PM


Google News

செஞ்சி : செஞ்சி அருகே ஆள் இல்லாத வீட்டில் அழுகிய நிலையில் தூக்கில் தொங்கியபடி வாலிபர் இறந்து கிடந்தார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள மொடையூர் காலனியை சேர்ந்த கோபால் மகன் குப்புசாமி. இவரது உறவினருக்கு உடல் நிலை சரி இல்லை என்பதால், அவருடன் தங்கி உதவி செய்ய குப்புசாமி குடும்பத்துடன் சில நாட்களுக்கு முன்பு சென்னை சென்று விட்டார். இவரது வீட்டில் இருந்து சில நாட்களாக துர்நாற்றம் வீசியது. அருகில் இருந்தவர்கள் குப்புசாமிக்கு தெரிவித்தனர். அவர், நேற்று மாலை தனது வீட்டிற்கு திரும்ப வந்துள்ளார். வீட்டின் உள்ளே அடையாளம் தெரியாத 25 வயது மதிக்க தக்க வாலிபரின் உடல் அழுகிய நிலையில் தூக்கில் தொங்கிய படி இருந்தது. இறந்த வாலிபர் வெளிர் சந்தன நிறத்தில் பேன்ட், சட்டை அணிந்திருந்தார். தகவலறிந்த செஞ்சி இன்ஸ்பெக்டர் ராமநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us