Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/அடுத்த வீட்டு பெண்ணுடன் தகராறு

அடுத்த வீட்டு பெண்ணுடன் தகராறு

அடுத்த வீட்டு பெண்ணுடன் தகராறு

அடுத்த வீட்டு பெண்ணுடன் தகராறு

ADDED : செப் 09, 2011 11:57 PM


Google News
திருத்தணி : திருத்தணி ஆறுமுகசாமி கோவில் தெருவில் வசிப்பவர் விஜயகுமார்.

இவரின் மனைவி நதியா,24. இவர்களுக்கு, சுஸ்மிதா,3, என்ற பெண் குழந்தை உள்ளது. குமார், திருத்தணி பூ மார்க்கெட்டில் வியாபாரம் செய்து வருகிறார். இவரது வீட்டுக்குக் கீழ் வீட்டில், மாலா என்பவர் வசித்து வருகிறார்.குமாரின் மனைவி நதியாவுக்கும், மாலாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் மாலை, மாலா நதியாவை தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நதியா, வீட்டின் உள்கதவை பூட்டிக் கொண்டு, தன் மூன்று வயது மகள் சுஸ்மிதாவை தூக்கிலிட்டுக் கொன்று, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இரவு 10 மணிக்கு வீடு திரும்பிய குமார், வீட்டின் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்து, கதவை உடைத்து வீட்டுக்குள் சென்ற போது, மகள் சுஸ்மிதாவுடன், நதியா தூக்கில் தொங்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். திருத்தணி போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us