/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/கல்வி உதவித்தொகை விண்ணப்பம் அனுப்ப அக்.,31ம் தேதி கடைசி நாள்கல்வி உதவித்தொகை விண்ணப்பம் அனுப்ப அக்.,31ம் தேதி கடைசி நாள்
கல்வி உதவித்தொகை விண்ணப்பம் அனுப்ப அக்.,31ம் தேதி கடைசி நாள்
கல்வி உதவித்தொகை விண்ணப்பம் அனுப்ப அக்.,31ம் தேதி கடைசி நாள்
கல்வி உதவித்தொகை விண்ணப்பம் அனுப்ப அக்.,31ம் தேதி கடைசி நாள்
ADDED : அக் 08, 2011 01:25 AM
நாமக்கல்: 'தொழிலாளர் நலநிதிச் செலுத்தும் தொழிலாளர்களின் கல்வி பயிலும்
குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பம், இம்மாதம் 31ம்
தேதிக்குள் அனுப்ப வேண்டும்' என, தொழிலாளர் ஆய்வாளர் ராஜாராமன்
தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு
தொழிலாளர் நல வாரியத்துக்கு தொழிலாளர் நலநிதிச் செலுத்தும் தொழிலாளர்களின்
கல்வி பயிலும் குழந்தைகளுக்கு, கல்வி உதவித் தொகை பெறுவதற்கான
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதன்படி, ப்ளஸ் 1 வகுப்பு முதல்
முதுகலைப் பட்டம் வரை பயிலும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு, பாடப்
புத்தகம், உதவித்தொகை வழங்கப்படுகிறது. இன்ஜினியரிங், மருத்துவம், சட்டம்,
விவசாயம், பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர் கல்விகளுக்கான
பட்ட மேற்படிப்பு, பட்ட படிப்புகளுக்கான கல்வி பயிலும் மாணவ, மாணவியருக்கு
கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. மேலும், எஸ்.எஸ்.எல்.ஸி., மற்றும் ப்ளஸ்
2 வகுப்பு அரசு பொதுத்தேர்வில் கல்வி மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்று
தேர்ச்சி பெற்ற மூன்று மாணவர்களுக்கு, ஊக்கத் தொகை வழங்கப்படும். கல்வி
உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள், இம்மாதம் 31ம் தேதிக்குள் அனுப்ப
வேண்டும். நலத்திட்டங்கள் குறித்த விவரங்கள் மற்றும் விண்ணப்பங்களுக்கு,
'செயலாளர், தமிழ்நாடு தொழிலாளர் நலவாரியம், தபால் பெட்டி எண்- 718, சென்னை-
6' என்ற முகவரிக்கு, சுய விலாசமிட்ட தபால்தலை ஒட்டப்பட்ட உறையுடன் தொடர்பு
கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.


