/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/பறவை காய்ச்சல் நோய் கண்காணிப்பு குழுக்கூட்டம்பறவை காய்ச்சல் நோய் கண்காணிப்பு குழுக்கூட்டம்
பறவை காய்ச்சல் நோய் கண்காணிப்பு குழுக்கூட்டம்
பறவை காய்ச்சல் நோய் கண்காணிப்பு குழுக்கூட்டம்
பறவை காய்ச்சல் நோய் கண்காணிப்பு குழுக்கூட்டம்
ADDED : அக் 09, 2011 12:01 AM
தஞ்சாவூர்: தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் பறவை காய்ச்சல் கண்காணிப்பு குழு கூட்டம் கலெக்டர் பாஸ்கரன் தலைமையில் நடந்தது.அப்போது அவர் கூறியதாவது:தற்போது தமிழ்நாட்டில் பறவை காய்ச்சல் நோய் இல்லை.
எனவே தஞ்சாவூரில் பறவை காய்ச்சல் குறித்து மக்கள் பீதியடைய வேண்டாம். தஞ்சாவூர் விவசாயம் சார்ந்த மாவட்டமாக இருப்பதால் புறக்கடை கோழி வளர்ப்பு நேரடி வருமானம் தரும் தொழிலாக உள்ளது. எனவே மக்கள் கோழிகளின் இனப்பெருக்கம், நோய் தடுப்பு முறைகள் பற்றி அறிவியல் பூர்வாமாக தெரிந்து கொள்ள வேண்டும். பறவை காய்ச்சல் குறித்த சந்தேகங்களை கால்நடை மருத்துவ மனைகளை தொடர்பு கொண்டு நிவர்த்தி செய்து கொள்ளாலம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.முன்னதாக பறவை காய்ச்சல் நோய் ஏற்படும் போது கால்நடை பராமரிப்புத்துறை செயல்படுத்த வேண்டிய தடுப்பு நடவடிக்கை முறைகள், பறவை காய்ச்சல் நோய் மனிதர்களுக்கு தாக்கும் போது நோயை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்தும் நோயால் ஏற்படும் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் குறித்து போலீஸார் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், நகராட்சி நிர்வாகம், பொதுப்பணித்துறை அதிகாரிகளின் பணிகள் குறித்து கலெக்டர் பாஸ்கரன் ஆய்வு செய்தார்.நோய் கட்டுப்பாட்டு குழு உறுப்பினர்கள், கோழி கறி விற்பனையாளர்கள், மகளிர் குழுவினர் பங்கேற்றனர். இதில், பறவை காய்ச்சல் நோய் தடுப்பு முறைகள் குறித்து செயல் விளக்கப் படம் காண்பிக்கப்பட்டது.


