Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/குடும்ப வன்முறையால் பெண்கள் தற்கொலை அதிகரிப்பு: எஸ்.பி., பேச்சு

குடும்ப வன்முறையால் பெண்கள் தற்கொலை அதிகரிப்பு: எஸ்.பி., பேச்சு

குடும்ப வன்முறையால் பெண்கள் தற்கொலை அதிகரிப்பு: எஸ்.பி., பேச்சு

குடும்ப வன்முறையால் பெண்கள் தற்கொலை அதிகரிப்பு: எஸ்.பி., பேச்சு

ADDED : ஆக 12, 2011 10:55 PM


Google News
தேன்கனிக்கோட்டை: ''கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குடும்ப வன்முறை காரணமாக பெண்கள் தற்கொலை அதிகரித்துள்ளது,'' என எஸ்.பி., கண்ணன் தெரிவித்துள்ளார்.

தேன்கனிக்கோட்டை அடுத்த பெத்தகுல்லு கிராமத்தில் எஸ்.பி., கண்ணன் தலைமையில் ஏ.எஸ்.பி., ரம்யபாரதி முன்னிலையில் கிராம கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. குழந்தை திருமண தடுப்பு, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, குடும்ப வன்முறை ஒழிப்பு மற்றும் தற்கொலை தடுப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் எஸ்.பி., கண்ணன் பேசியதாவது:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2009ம் ஆண்டில் 215 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இதில், 83 பேர் பெண்கள். 2010ம் ஆண்டில் 232 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இதில் 100 பேர் பெண்கள். இந்த ஆண்டில் ஜூலை மாதம் முடிய 194 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இதில், 85 பேர் பெண்கள். ஆண்கள் தற்கொலைக்கு பல காரணங்கள் உண்டு. ஆனால் பெண்கள் தற்கொலைக்கு குடும்ப வன்முறை மட்டுமே காரணமாக இருக்க முடியும். குடும்ப வன்முறை இருந்தால் பெண்கள் மகளிர் போலீஸ் ஸ்டேஷனை அணுகி ஆலோசனை பெற்று கொள்ளலாம்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் 2009ம் ஆண்டு 112 வழக்குகளும் 2010ம் ஆண்டில் 157 வழக்குகளும், 2011ம் ஆண்டு இதுவரை 84 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறான குற்றங்கள் நடக்காமல் இருக்க காவல் துறையினரால் கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் உள்ள இடங்களில் பெண்கள் அதிகப்படியாக கூடும் இடங்களிலும் ரோந்து பணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதிகப்படியான சாலை விபத்துகள் நடப்பதை தடுக்க மற்றும் சாலை விபத்து இறப்பு மற்றும் காயமடைவதை தவிர்க்க ஹெல்மெட் அணிந்து செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து வீடுகளிலும் உள்ள பெண்கள் தங்கள் குழந்தைகளை கட்டாயம் பள்ளிக்கு அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us