மாயமான ஐ.ஏ.எஸ். அதிகாரி அரியானாவில் மீட்பு
மாயமான ஐ.ஏ.எஸ். அதிகாரி அரியானாவில் மீட்பு
மாயமான ஐ.ஏ.எஸ். அதிகாரி அரியானாவில் மீட்பு
UPDATED : செப் 05, 2011 10:08 AM
ADDED : செப் 05, 2011 10:01 AM
புதுடில்லி: மாயமான ராஜஸ்தான் ஐ.ஏ.எஸ். அதிகாரி நவீன் ஜெயின் , அரியானா மாநிலத்தில் உள்ள தனது பிறந்த ஊரில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் குடியேறிய நாட்டினர் துறைக்கான கமிஷனராக இருந்தவர் நவீன்ஜெயின் (36) . இவர் 2001-ம்ஆண்டு ஐ.ஏ.எஸ். கேடராக தேர்வு பெற்றவர். இவர் கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதியன்று அல்வார் நகரில் தனது குடும்பத்தினருடன் ஒரு ரெஸ்டராண்டில் காலை உணவு சாப்பிட சென்றார். பின்னர் அவர் திடீரென காணாமல் போனார். இது தொடர்பாக அவரது மனைவி சுனிதா , போலீசில் புகார் செய்தார். முதல்வர் அசோக்கெலாட்டையும் சந்தித்து கணவரை மீட்டு தருமாறு கோரிக்கை வைத்தார்..
ராஜஸ்தான் போலீசாரும் இவரை டில்லி, அரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் தேடி வந்தனர்.
தற்போது இவரது மனைவி சுனிதா திடீர் உடலநலக்குறைவால் ராஜ்ஸ்தான் மாநிலத்தில் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார்.
இந்நிலையில் இன்று ஜெயப்பூரில் உள்ள தனது மனைவி சுனிதாவிடம் மொபைலில் பேசிய நவீன்ஜெயின், தான் அரியானாவில் உள்ள பிறந்த ஊரான நவர்வானா கிராமத்தில் நலமுடன் இருப்பதாகவும் எதற்கும் கவலைப்பட வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார். கடந்த ஐந்து நாட்களாக ராஜஸ்தான் போலீசாரை அவதிக்குள்ளாக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரி, இன்று அரியானாவில் பிறந்த ஊரில் கண்டுபிடிக்கப்பட்டார். அரசு வழங்கிய குடியிருப்பு ஒதுக்கீட்டு விகாரத்தினால், இவர் மன உளச்சலுக்கு ஆளானதாக ஏற்கனவே அவரது குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர். அதன் காரணமாக அவர் திடீரென மாயமானதாக கூறப்படுகிறது.


