ADDED : ஜூலை 29, 2011 10:24 AM
சென்னை: ஆன்மிக சொற்பொழிவாளர் தாமல் ராமகிருஷ்ணனுக்கு, 'பிரவசன கலா சாதுரா' என்ற பட்டத்தை, சகடாபுர மடாதிபதி வழங்கினார்.
தாமல் ராமகிருஷ்ணன், 40 ஆண்டுகளாக, ஆன்மிக சொற்பொழிவாற்றி வருகிறார். இவரது ராமாயணம், பாகவதம், நாராயணீயம் உள்ளிட்ட சொற்பொழிவுகள், 'டிவி'க்களிலும் ஒளிபரப்பாகியுள்ளன. மயிலாப்பூரில் உள்ள, சமஸ்கிருதக் கல்லூரியில், கடந்த 18ம் தேதியில் இருந்து ஒரு வாரத்துக்கு, இவரது ராமாயண சொற்பொழிவு நடந்தது.
சாதுர்மாஸ்ய விரதத்துக்காக, சமஸ்கிருதக் கல்லூரி வந்துள்ள சகடாபுர சங்கர மடாதிபதி கிருஷ்ணானந்த தீர்த்தர் தலைமையில், இச்சொற்பொழிவு நடந்தது. சொற்பொழிவில் மகிழ்ச்சியடைந்த கிருஷ்ணானந்த தீர்த்தர், நிகழ்ச்சியின் நிறைவு நாளான,25ம் தேதி, தாமலுக்கு, 'பிரவசன கலா சாதுரா' என்ற பட்டத்தையும், ஸ்ரீ பதரி சங்கராச்சார்ய சமஸ்தானத்தின், சகடாபுர மட ஆஸ்தான வித்வான் என்ற அங்கீகாரத்தையும் வழங்கினார்.


