/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ஆக்கிரமிப்பு கடைகளால் பொதுமக்களுக்கு இடையூறுஆக்கிரமிப்பு கடைகளால் பொதுமக்களுக்கு இடையூறு
ஆக்கிரமிப்பு கடைகளால் பொதுமக்களுக்கு இடையூறு
ஆக்கிரமிப்பு கடைகளால் பொதுமக்களுக்கு இடையூறு
ஆக்கிரமிப்பு கடைகளால் பொதுமக்களுக்கு இடையூறு
ADDED : ஆக 22, 2011 12:03 AM
வால்பாறை : வால்பாறை மார்க்கெட் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வால்பாறை புதுமார்கெட் பகுதி குறுகலான இடத்தில் அமைந்துள்ளது. சாலையோரத்தின் இருபுறத்திலும் ஆக்கிரமிப்பு கடைகள் வைக்கப்பட்டுள்ளதால், மார்க்கெட் பகுதி வழியாக வாகனங்கள் சென்று வரவும், பொதுமக்கள் நடந்து செல்லவும் இடையூறாக உள்ளது. குறிப்பாக, சந்தை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில், அவசரத்தேவைக்கு ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத நிலையில், சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரித்துள்ளன. போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ள மார்க்கெட் பகுதி ஆக்கிரமிப்பு கடைகளை, அதிகாரிகள் பாரபட்சமின்றி அகற்ற வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


