/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பாலிடெக்னிக் கல்லூரியில் தேசிய மாணவர் படை துவக்கம்பாலிடெக்னிக் கல்லூரியில் தேசிய மாணவர் படை துவக்கம்
பாலிடெக்னிக் கல்லூரியில் தேசிய மாணவர் படை துவக்கம்
பாலிடெக்னிக் கல்லூரியில் தேசிய மாணவர் படை துவக்கம்
பாலிடெக்னிக் கல்லூரியில் தேசிய மாணவர் படை துவக்கம்
ADDED : ஜூலை 25, 2011 12:12 AM
காரைக்கால் : காரைக்கால் வரிச்சிகுடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் தேசிய மாணவர் படை துவக்க விழா நடந்தது.
கல்லூரி தேசிய மாணவர் படை அதிகாரி பத்மராஜ் வரவேற்றார். புதுச்சேரி என்.சி.சி., கமாண்டர் கர்னல் டி.பி.சிங் தலைமை தாங்கி, பெயர் பலகையை திறந்து வைத்தார். கல்லூரி முதல்வர் சந்தனசாமி முன்னிலை வகித்தார். மாவட்ட தேசிய மாணவர் படை கமாண்டர் ஹரிப் சந்தோஷ், புதுச் சேரி என்.சி.சி., கப்பற்படை அதிகாரி ஆனந்த் ஆகி யோர் தேசிய மாணவர் படை குறித்து விளக்கினர். விழாவில் பாலிடெக்னிக் கல்லூரி, பஜன்கோ, அண்ணா கலைக் கல்லூரி தேசிய மாணவர் படை வீரர்கள் கலந்து கொண்டனர். கல்லூரி விரிவுரையாளர் ஜெயபிரகாஷ் நன்றி கூறினார்.