/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/தேயிலைக்கு அரசு மானியத்தால் 80 சதவீத விவசாயிகளுக்கு பயனில்லைதேயிலைக்கு அரசு மானியத்தால் 80 சதவீத விவசாயிகளுக்கு பயனில்லை
தேயிலைக்கு அரசு மானியத்தால் 80 சதவீத விவசாயிகளுக்கு பயனில்லை
தேயிலைக்கு அரசு மானியத்தால் 80 சதவீத விவசாயிகளுக்கு பயனில்லை
தேயிலைக்கு அரசு மானியத்தால் 80 சதவீத விவசாயிகளுக்கு பயனில்லை
ADDED : ஆக 03, 2011 01:08 AM
மஞ்சூர் : தேயிலைக்கு அரசு வழங்கும் மானியத்தால் 80 சதவீத விவசாயிகளுக்கு பயனில்லை.
தனியார் தொழிற்சாலைக்கு 'சப்ளை' செய்யும் சிறு தேயிலை விவசாயிகளுக்கும் மானியம் வழங்க அரசு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, விவசாயிகள் முழுமையாக பயனடைய முடியும். நீலகிரி மாவட்டத்தில் 60 ஆயிரத்துக்கு மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள் தேயிலை விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர். மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் 200க்கு மேற்பட்ட தனியார் தொழிற்சாலைகள், 15 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் 22 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் அங்கத்தினர்களாக உள்ளனர். மாவட்டத்தில் உள்ள தேயிலை விவசாயிகளில் 20 சதவீதத்தினர் மட்டுமே கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைக்கு பசுந்தேயிலை சப்ளை செய்கின்றனர்; 80 சதவீதத்தினர் தனியார் தேயிலை தொழிற்சாலைக்கு சப்ளை செய்து வருகின்றனர். குந்தா பகுதியை தவிர, மாவட்டத்தில் மற்ற அனைத்து பகுதிகளிலும் உள்ள தேயிலை விவசாயிகள் தனியார் தொழிற்சாலைக்கு அதிகளவில் பசுந்தேயிலை சப்ளை செய்கின்றனர். மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளை மேம்படுத்தும் வகையில், அதில் அங்கத்தினர்களாக உள்ள தேயிலை விவசாயிகளுக்கு கடந்த ஜூன் மாதத்திலிருந்து டிசம்பர் வரை பசுந்தேயிலை கிலோவுக்கு 2 ரூபாய் மானியம் வழங்க உத்தரவிட்டுள்ளது.இது கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை அங்கத்தினர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனினும், மாவட்டத்தில் உள்ள 80 சதவீத தேயிலை விவசாயிகள் தனியார் தொழிற்சாலைக்கு சப்ளை செய்வதால்,இந்த மானியம் கிடைப்பதில்லை. நீலகிரி மாவட்டத்தில் கூட்டுறவு தொழிற்சாலை மற்றும் தனியார் தொழிற்சாலைக்கு பசுந்தேயிலை சப்ளை செய்யும் விவசாயிகள் பயனடையும் வகையில், அனைவருக்கும் மானியம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஐ.என்.டி.யு.சி., மாவட்ட தலைவர் மஞ்சைமோகன் கூறுகையில், ''கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை அங்கத்தினர்களுக்கு, பசுந்தேயிலை கிலோவுக்கு இரண்டு ரூபாய் மானியம் அறிவித்திருப்பது, வரவேற்கத்தக்கது. அதே சமயத்தில், தனியார் தொழிற்சாலைக்கு சப்ளை செய்து வரும் 80 சதவீத விவசாயிகளுக்கும் மானியம் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.


