Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெரம்பலூர்/பஞ்., தலைவராக தேர்வுசெய்ய பணம் கலெக்டரிடம் இளைஞர் மன்றம் புகார்

பஞ்., தலைவராக தேர்வுசெய்ய பணம் கலெக்டரிடம் இளைஞர் மன்றம் புகார்

பஞ்., தலைவராக தேர்வுசெய்ய பணம் கலெக்டரிடம் இளைஞர் மன்றம் புகார்

பஞ்., தலைவராக தேர்வுசெய்ய பணம் கலெக்டரிடம் இளைஞர் மன்றம் புகார்

ADDED : அக் 06, 2011 03:37 AM


Google News
பெரம்பலூர்: பஞ்சாயத்து தலைவராக தேர்ந்தெடுக்க பொதுமக்களுக்கு முன்தொகை அளித்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட கலெக்டர் தரேஸ் அஹமதுவிடம் நேற்று புகார் அளிக்கப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள பில்லங்குளம் கிராமத்தை சேர்ந்த இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகிகள் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

பில்லங்குளம் பஞ்சாயத்து தலைவராக கடந்த ஐந்து ஆண்டாக பதவி வகித்தவர் சின்னசாமி. இவர் நடக்கவுள்ள உள்ளாட்சி தேர்தலில் மீண்டும் போட்டியிடுகிறார். தலைவர் பதவிக்கு மீண்டும் தேர்ந்தெடுக்க, கிராம மக்களுக்கு ரூ. 3 லட்சம் அளிப்பதாகவும், முன்தொகையாக ரூ. 50 ஆயிரத்தை அதே கிராமத்தை சேர்ந்த ஒரு சில நபர்களிடம் வழங்கியுள்ளார்.

தகவலறிந்த இளைஞர் மன்றத்தைச் சேர்ந்த நிர்வாகிகள், கடந்த மாதம் 23ம் தேதி பஞ்சாயத்துக்கள் உதவி இயக்குநரிடமும், 29ம் தேதி மாவட்ட போலீஸ் எஸ்.பி.,யிடமும் புகார் அளித்துள்ளோம். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட நபர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us