Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/கள்ள ஓட்டுகள் போட முயற்சி: அன்பழகன் பகீர் குற்றச்சாட்டு

கள்ள ஓட்டுகள் போட முயற்சி: அன்பழகன் பகீர் குற்றச்சாட்டு

கள்ள ஓட்டுகள் போட முயற்சி: அன்பழகன் பகீர் குற்றச்சாட்டு

கள்ள ஓட்டுகள் போட முயற்சி: அன்பழகன் பகீர் குற்றச்சாட்டு

ADDED : அக் 13, 2011 01:47 AM


Google News
புதுச்சேரி:'இந்திரா நகர் தொகுதியில் கள்ள ஓட்டு போட திட்டமிட்டுள்ளனர்' என, மாநில அ.தி. மு.க., செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ., குற்றம்சாட்டி உள்ளார்.

அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:இந்திரா நகர் இடைத் தேர்தல் ஜனநாயக ரீதியில் நேர்மையாகவும், நியாயமாகவும் நடக்குமா என்ற சந்தேகம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த 15 நாட்களாக ஆளுங்கட்சியினரின் அராஜகம், நன்னடத்தை விதிமுறை மீறல் போன்றவற்றைத் தடுப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன் வரவில்லை. பார்வையாளர்களாக மட்டுமே அதிகாரிகள் இருந்தனர்.ஆதாரத்துடன் புகார்களைத் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காதது வருத்தமளிக்கிறது.

இந்திரா நகர் தொகுதியில் 6000க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் தற்போது அங்கு குடியிருக்கவில்லை. அந்தத் தொகுதி வாக்காளர்களுக்கு பூத் சிலிப்கள் அரசு ஊழியர்கள் மூலம் வழங்கப்பட்டது. அரசு ஊழியர்களை மிரட்டி, தொகுதியில் இல்லாத 3000க்கும் மேற்பட்டவர்களின் பூத் சிலிப்புகளை ஆளுங்கட்சியைச் சேர்ந்த சிலர் பெற்று சென்றுள்ளனர். எனவே, கள்ள ஓட்டு போடலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பி உள்ளோம். ஜனநாயகத்தை நிலைநாட்டும் வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கள்ள ஓட்டு போடும் முயற்சியை முறியடிக்க வேண்டும். எங்களுக்குத் தேர்தல் பணி செய்தவர்கள் இரவோடு இரவாக மிரட்டப்பட்டுள்ளனர். நேர்மையாக தேர்தல் நடக்குமா என்ற அச்சம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் கல்யாணசுந்தரம் மீது ஆள் மாறாட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் தமிழக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்கிறார் முதல்வர். நாங்களா, அமைச்சரை 10ம் வகுப்பு தேர்வு எழுதுமாறு கூறினோம். நாங்களா, திண்டிவனம் மையத்தைத் தேர்ந்தெடுத்தோம். கல்யாணசுந்தரத்திடம் சம்மனை தர முடியவில்லை என தமிழக போலீசாரிடம் கடிதம் தரப்பட்டுள்ளது. அமைச்சரை காப்பாற்ற புதுச்சேரி அரசின் துறைகள் துணை போகிறது.சபாநாயகரால் கண்டுபிடிக்க முடியாதவர், அமைச்சராக இருக்க வேண்டுமா... நடந்த சம்பவங்களுக்கு முழு பொறுப்பை முதல்வர் ஏற்க வேண்டும். சம்பந்தப்பட்ட அமைச்சரால், முதல்வர் மிரட்டப்படுவதாக எங்களுக்குத் தகவல் வந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, ரங்கசாமி தலைமையிலான அரசை மத்திய அரசு டிஸ்மிஸ் செய்ய வேண்டும். இவ்வாறு அன்பழகன் கூறினார். எம்.எல்.ஏ.,க்கள் ஓம்சக்தி சேகர், புரு÷ஷாத்தமன், பெரியசாமி, பாஸ்கர், வேட்பாளர் பாஸ்கரன் உடனிருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us