ADDED : ஆக 03, 2011 01:33 AM
காரிமங்கலம்: காரிமங்கலம் ஆர்.பி.டி., தொண்டு நிறுவனத்தின் பொதுக்குழு
கூட்டம் நடந்தது.அறக்கட்டளை நிறுவனர் அண்ணாதுரை தலைமை வகித்தார்.
தாழ்த்தப்பட்ட மக்களுக்காக உழைத்த இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாளை அரசு
விழாவாக அறிவித்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவித்து
தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை, நோட்டு
புத்தகங்கள் வழங்கப்பட்டது.அறக்கட்டளை தலைவர் குமரேசன், ஆலோசகர் உதயசங்கர்,
ஜலபதி, ஏழுமலை, மனோகரன், கணேஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


