Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/மாணவருக்கு கல்விஉபகரணம் வழங்கல்

மாணவருக்கு கல்விஉபகரணம் வழங்கல்

மாணவருக்கு கல்விஉபகரணம் வழங்கல்

மாணவருக்கு கல்விஉபகரணம் வழங்கல்

ADDED : செப் 08, 2011 02:47 AM


Google News
ராசிபுரம்:ராசிபுரம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், சிறப்பு பயிற்சி மூலம் கல்வி கற்கும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது.பள்ளித் தலைமையாசிரியர் பாரதி தலைமை வகித்தார். கிராம கல்விக் குழு தலைவர் பாலு முன்னிலை வகித்தார். மாவட்ட உதவி திட்ட அலுவலர் அல்லிமுத்து பங்கேற்று, மாணவ, மாணவியருக்கு ஸ்கூல் பேக், சீருடைகள், டிக்ஷனரி, எழுது பொருட்கள் உள்ளிட்ட கற்றல் உபகரணங்களை வழங்கி பேசினார்.

நிகழ்ச்சியில், வட்டார வள மைய மேற்பார்வையாளர் ரவி, உதவி தொடக்க கல்வி அலுவலர் சந்திரசேகரன், பி.டி.ஏ., தலைவர் தருமலிங்கம், ஆசிரியர் பயிற்றுனர் சத்யா, ஆசிரியர் ஜீவா, ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் உள்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us