Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/வடக்கு விஜயநாராயணம் ஆர்.எஸ். இல்லத் திருமண விழா

வடக்கு விஜயநாராயணம் ஆர்.எஸ். இல்லத் திருமண விழா

வடக்கு விஜயநாராயணம் ஆர்.எஸ். இல்லத் திருமண விழா

வடக்கு விஜயநாராயணம் ஆர்.எஸ். இல்லத் திருமண விழா

ADDED : செப் 10, 2011 04:06 AM


Google News
நான்குநேரி : நான்குநேரி அருகேயுள்ள வடக்கு விஜயநாராயணம் ஆர்.எஸ்.இல்லத் திருமண விழாவில் அமைச்சர்கள் பன்னீர்செல்வம், செங்கோட்டையன் நாளை (11ம் தேதி) கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைக்கின்றனர்.

வடக்கு விஜயநாராயணம் ஆர்.எஸ்.இல்லத் திருமண விழா நாளை (11ம் தேதி) பாளை., கேடிசி நகர் மகராசி மகாலில் நடக்கிறது. மணமக்கள் ஆர்.கவிதா, நாகராஜன் ஆகியோர் திருமண விழாவிற்கு கதர் மற்றம் கிராம தொழில்துறை அமைச்சர் செந்தூர் பாண்டியன் தலைமை வகிக்கிறார். தெற்கு மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா முன்னிலை வகிக்கின்றனர். நான்குநேரி தொகுதி செயலாளர் வடக்கு விஜயநாராயணம் ஆர்.எஸ்.முருகன் வரவேற்கிறார். அதிமுக பொருளாளரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், வேளாண்மைத்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்துகின்றனர். இவ்விழாவில் தமிழக அமைச்சர்கள் கருப்பசாமி, சண்முகநாதன், ஆர்.பி.உதயகுமார், செல்லப்பாண்டியன், பச்சைமால் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் நயினார் நாகேந்திரன், துரையப்பா, எம்.பி., மனோஜ்பாண்டியன், முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம், பாசறை மாநில இணை செயலாளர் சரவணபெருமாள் உட்பட பலர் பேசுகின்றனர். அமைப்பு சாரா ஓட்டுநர் அணி பொருளாளர் ராஜா நன்றி கூறுகிறார். விழா ஏற்பாடுகளை ஆர்.எஸ்.முருகன் மற்றும் குடும்பத்தினர் செய்து வருகின்றனர். திசையன்விளையில் கபடி போட்டி நடந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us