/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/விழுப்புரம் நகராட்சியில் சார்பு செயலர்கள் களப் பயிற்சிவிழுப்புரம் நகராட்சியில் சார்பு செயலர்கள் களப் பயிற்சி
விழுப்புரம் நகராட்சியில் சார்பு செயலர்கள் களப் பயிற்சி
விழுப்புரம் நகராட்சியில் சார்பு செயலர்கள் களப் பயிற்சி
விழுப்புரம் நகராட்சியில் சார்பு செயலர்கள் களப் பயிற்சி
ADDED : செப் 15, 2011 03:43 AM
விழுப்புரம்:விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் மத்திய அரசின் சார்பு
செயலர்கள் களப் பயிற்சி மேற்கொண்டனர்.விழுப்புரம் மாவட்டத்தில் மத்திய
அரசின் சார்பு செயலர்கள் அரசு துறைகளின் செயல்பாடுகள் குறித்து களப்
பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். கலாச்சாரத்துறை சார்பு செயலர் மதன்சவுராஷ்யா
தலைமையில் வந்துள்ள 12 பேர் கொண்ட சார்பு செயலர்கள் குழுவினர் நேற்று
விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் களப் பயிற்சி மேற்கொண்டனர்.நகராட்சி
அலுவலகத்தின் செயல்பாடுகள், மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்துதல்,
கட்டமைப்பு பணிகள் குறித்து கேட்டறிந்தனர். இவர்களுக்கு பதிலளித்த நகர மன்ற
சேர்மன் ஜனகராஜ், விழுப்புரம் நகராட்சியில் வரி உயர்த்தப்படாமல் மக்கள்
நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
எதிர்கால மக்கள் நலனை கருத்தில்
கொண்டு பாதாள சாக்கடைத் திட்டம், குடிநீர் திட்டம், சிமென்ட் சாலைகள்
அமைக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.கவுன்சிலர்களுக்கு சம்பளம்
வழங்கப்படுகிறதா என அவர்கள் கேட்டனர். கவுன்சிலர்களுக்கு மாதாந்திர கூட்ட
அமர்வுப் படியாக 600 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. மக்கள்
எதிர்பார்க்கும் திட்டங்களை நகராட்சி சார்பில் சிறப்பாக செயல்படுத்தி
வருவதாக கமிஷனர் சிவக்குமார், பொறியாளர் பார்த்திபன் உள்ளிட்டோர்
விளக்கினர். தொடர்ந்து நகராட்சி பள்ளி, மின் மயானம் உள்ளிட்ட திட்டடப்
பணிகளை அவர்கள் பார்வையிட்டுச் சென்றனர்.


