ADDED : ஜூலை 25, 2011 12:31 AM
கள்ளக்குறிச்சி : கச்சிராயபாளையம் அடுத்த கரடிசித்தூர் கிராமத்தைச் சேர்ந்த பாவாடை மகன் கேசவலு 35.
கடந்த 12ம் தேதி அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் டிராக்டரை ஓட்டி வந்து கேசவலு வயலில் உள்ள வாய்க்காலை சேதப்படுத்தினார். இதனை தட்டிக்கேட்ட கேசவலுவை தாக்கி சக்திவேல் கொலை மிரட்டல் விடுத்தார். புகாரின் பேரில் கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.