ADDED : ஜூலை 19, 2011 10:39 PM
வேடசந்தூர் : உதவி தொடக்க கல்வி அலுவலகத்தினரை கண்டித்து தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினர், வேசந்தூரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வட்டார தலைவர் ராஜரத்தினம் தலைமை வகித்தார். முன்னாள் நிர்வாகிகள் அங்கமுத்து, குருசாமி, முத்து பெருமாள், தங்கவேலு, வரதராசன் முன்னிலை வகித்தனர்.
வட்டார செயலாளர் பாலமுருகன் வரவேற்றார். மாவட்ட துணை தலைவர் இந்துமதி, செயற்குழு உறுப்பினர் சுகந்தி, செயலாளர் காளிமுத்து, பொருளாளர் பீட்டர் ராஜ், பொதுக்குழு உறுப்பினர் ஆரோக்கியராஜ் பேசினர். தொடக்கப் பள்ளி தலைமை ஆசரியர்களுக்கு தேர்வு நிலை மறு ஊதியம் வழங்க வேண்டும்; தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் , நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு திருத்திய ஊதிய விகிதம் நிர்ணயிக்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டது. வட்டார பொருளாளர் வெங்கடாசலபதி நன்றி கூறினார்.


