/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ஓசூர் உழவர் சந்தையில் ரூ.15 லட்சத்துக்கு விற்பனைஓசூர் உழவர் சந்தையில் ரூ.15 லட்சத்துக்கு விற்பனை
ஓசூர் உழவர் சந்தையில் ரூ.15 லட்சத்துக்கு விற்பனை
ஓசூர் உழவர் சந்தையில் ரூ.15 லட்சத்துக்கு விற்பனை
ஓசூர் உழவர் சந்தையில் ரூ.15 லட்சத்துக்கு விற்பனை
ADDED : ஆக 12, 2011 10:59 PM
ஓசூர்:ஓசூர் உழவர்சந்தையில் வர லட்சுமி பண்டிகையையொட்டி நேற்று ஒரே நாளில்,
15 லட்ச ரூபாய்க்கு காய்கறிகள் விற்பனை நடந்தது. மல்லிகை பூ நேற்று ஒரே
நாளில், 150 ரூபாய் அதிகரித்து கிலோ, 300 ரூபாய்க்கு விற்பனையானது.இன்று
12ம் தேதி வர லட்சுமி பண்டிகையொட்டி ஓசூர் உழவர்சந்தையில் காய்கறிகள்
மற்றும் பூஜைகளுக்கு தேவையான பூக்கள், பழங்கள் உள்ளிட்ட பொருட்களை
வாங்குவதற்கு பொதுமக்கள் கூட்டம் நேற்று அலை மோதியது.வழக்கத்துக்கு மாறாக
விவசாயிகளும், நேற்று மொத்தம், 122 டன் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு
வந்தனர். மொத்தம், 83 வகையான காய்கறிகள், பூக்கள் விற்பனைக்கு கொண்டு
வரப்பட்டது.
மொத்தம், 317 விவசாயிகள் காய்கறிகள் விற்பனை செய்தனர். நேற்று ஒரே நாளில்,
15 லட்சத்து, 73 ஆயிரத்து, 868 ரூபாய்க்கு காய்கறிகள் விற்பனை
செய்யப்பட்டது. இதுகுறித்த உழவர்சந்தை நிர்வாக அலுவலர் மேகநாதன்
கூறியதாவது:காய்கறிகள் விலையை பொறுத்தவரையில் நேற்று முன்தினம் வரை குறைவாக
இருந்தது. வர லட்சுமி பண்டிகையையொட்டி நேற்று ஒரே நாளில் காய்கறிகள்,
பூக்கள் விலை அதிகரித்துள்ளது. குறிப்பாக கிலோவுக்கு பூக்கள் விலை, 100
ரூபாய் முதல், 150 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.மல்லிகை பூ ஒரே நாளில், 150
ரூபாய் அதிகரித்து கிலோ, 300 ரூபாய் விற்பனையானது. சாமந்திபூ கிலோ, 200
ரூபாயும், கனகாம்பரம் கிலோ, 600 ரூபாய்க்கு விற்பனையாது. ரோஜா பூக்கள் ஒரு
பஞ்ச், 150 ரூபாய் விற்பனையானது. பூக்கள் மொத்தம், 1,120 கிலோ விற்பனைக்கு
வந்தது. காய்கறிகள், 2 ரூபாய் முதல், 8 ரூபாய் விலை உயர்ந்துள்ளது.
தக்காளி மட்டும் கிலோ, 3 ரூபாய் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.இவ்வாறு அவர்
தெரிவித்தார்.நேற்று ஓசூர் உழவர்சந்தையில், 122 டன்னும்,
தேன்கனிக்கோட்டையில், 20 டன்னுக்கும், ஆவலப்பள்ளி ஹட்கோவில், 10 டன்னும்,
கிருஷ்ணகிரியில்,, 25 டன்னும், காவேரிப்பட்டணத்தில், 3 டன்னும் காய்கறிகள்,
பூக்கள், பழங்கள் விற்பனைக்கு வந்தது.


