Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/காஷ்மீரில் கல்வீச்சில் ஈடுபட்ட வாலிபர்களை ரம்ஜானையொட்டி விடுவிக்க முதல்வர் முடிவு

காஷ்மீரில் கல்வீச்சில் ஈடுபட்ட வாலிபர்களை ரம்ஜானையொட்டி விடுவிக்க முதல்வர் முடிவு

காஷ்மீரில் கல்வீச்சில் ஈடுபட்ட வாலிபர்களை ரம்ஜானையொட்டி விடுவிக்க முதல்வர் முடிவு

காஷ்மீரில் கல்வீச்சில் ஈடுபட்ட வாலிபர்களை ரம்ஜானையொட்டி விடுவிக்க முதல்வர் முடிவு

ADDED : ஆக 29, 2011 12:08 AM


Google News
Latest Tamil News
ஸ்ரீநகர் : காஷ்மீரில் நடந்த கலவரத்தின் போது, கல்வீச்சில் ஈடுபட்ட இளைஞர்களை வழக்கிலிருந்து விடுவிப்பதாக, மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா அறிவித்துள்ளார். காஷ்மீரில், கடந்த ஆண்டு நடந்த ஊர்வலத்தின் போது, வன்முறை ஏற்பட்டதில், போலீசார் துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் பலியானார். இதையடுத்து, மாநிலம் முழுவதும் கலவரம் ஏற்பட்டது. 76 அரசு அலுவலகங்களும், 37 அரசு வாகனங்களும், ஏராளமான கடைகளும் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன.

இந்தக் கலவரத்தின் போது, கல்வீச்சு நடந்ததாக,1,300 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஏராளமான இளைஞர்கள் மீது, இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டதை எதிர்த்து, போராட்டம் நடத்தப் போவதாக, ஹூரியத் மாநாட்டு தலைவர் சயத் அலி ஷா ஜிலானி எச்சரித்திருந்தார்.



இது குறித்து, காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா கூறியதாவது: காஷ்மீர் கலவரத்தின் போது, கல்வீச்சில் ஈடுபட்ட அனைவரது மீதான வழக்குகளும், ரம்ஜானையொட்டி ரத்து செய்யப்படுகின்றன. கல்வீச்சில் ஈடுபட்டவர்கள், திருந்தி வாழ வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஆனால், தீ வைப்பு சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்குகளை, வாபஸ் பெற முடியாது. கல் வீச்சில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படுகின்றன.



அன்னா ஹசாரேவின் போராட்டம், மக்கள் சக்திக்குக் கிடைத்த வெற்றியாகும். இதன் மூலம், பார்லிமென்ட் ஜனநாயகம், மீண்டும் நிலைநாட்டப்பட்டுள்ளது. ஹசாரே இல்லாவிட்டால், இந்தப் போராட்டம் வெற்றி பெற்றிருக்க முடியாது. இனி, ஊழலை ஒழிக்கும் வகையிலான, வலுவான லோக்பாலை உருவாக்க வேண்டிய பொறுப்பு அரசிடம் உள்ளது. இவ்வாறு, ஒமர் கூறினார்.



தேசிய சிறுத்தை கட்சி தலைவர் பீம்சிங் குறிப்பிடுகையில், 'ஹசாரேவின் போராட்டத்தை, முடிவுக்குக் கொண்டு வந்த பிரதமரின் செயல் பாராட்டுக்குரியது. லோக்பால் மசோதா, காஷ்மீர் மாநிலத்துக்கும் பொருந்த வேண்டும்' என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us