/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/பள்ளிக்கு விடுமுறை விட்டதாக தி.மு.க., பிரசாரத்தால் பரபரப்புபள்ளிக்கு விடுமுறை விட்டதாக தி.மு.க., பிரசாரத்தால் பரபரப்பு
பள்ளிக்கு விடுமுறை விட்டதாக தி.மு.க., பிரசாரத்தால் பரபரப்பு
பள்ளிக்கு விடுமுறை விட்டதாக தி.மு.க., பிரசாரத்தால் பரபரப்பு
பள்ளிக்கு விடுமுறை விட்டதாக தி.மு.க., பிரசாரத்தால் பரபரப்பு
ADDED : ஜூலை 30, 2011 12:54 AM
செஞ்சி : பள்ளிக்கு விடுமுறை என தி.மு.க.,வினர் பிரசாரம் செய்ததால், மாணவர்களை ஆசிரியர்கள் அழைத்து வந்தனர்.
செஞ்சி தாலுகா தளவானூர் ஊராட்சி ஒன்றிய நடு நிலை பள்ளியில் 112 மாண வர்கள் படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் பள்ளி முடிந்து சென்ற மாண வர்களிடம் நாளை பள்ளிக்கு விடுமுறை என தி. மு.க.,வினர் நோட்டீஸ் கொடுத்து பிரசாரம் செய்தனர்.இதனால் அனைத்து மாணவர்களும் நேற்று பள் ளிக்கு வரவில்லை. இங்கு பணிசெய்யும் ஆறு ஆசிரியர்களும் பணிக்கு வந்திருந்தனர். இது குறித்து தலை மையாசிரியர் கிருஷ்ணகுமார், ஏ.இ.ஓ., ராமச்சந்திரனிடம் தகவல் தெரிவித்தார். அவரது அறிவுரையின் பேரில் ஆசிரியர்கள் வீடுகளுக்கு சென்று மாணவர்களை அழைத்து வந்தனர். இவர்களுக்கு அ.தி.மு.க., வினர் உதவினர். இதையடுத்து 88 பேர் பள்ளிக்கு வந்தனர். தி.மு.க.,- அ.தி.மு.க, நிர்வாகிகள் பள்ளி முன்பு கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.