ரூ. 1.20 லட்சம் கள்ளநோட்டு பறிமுதல்
ரூ. 1.20 லட்சம் கள்ளநோட்டு பறிமுதல்
ரூ. 1.20 லட்சம் கள்ளநோட்டு பறிமுதல்
ADDED : ஜூலை 13, 2011 03:27 AM
ஈரோடு: கொடுமுடியை சேர்ந்தவரிடம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டு
பிடிபட்டது.ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த சாலைப்புதூர் பகுதியை
சேர்ந்தவர் நாகுபிள்ளை.
இவரது மகன் ராஜராஜன் (42); கரூர் வைஸ்யா வங்கி
சிவகிரி கிளையில், செக்யூரிட்டியாக பணியாற்றி வந்தார். இரண்டு மாதங்களுக்கு
முன் வேலையை விட்டு நின்றுவிட்டார்.ஈரோடு பஸ் ஸ்டாண்டில் கள்ள ரூபாய்
நோட்டுகளுடன் ராஜராஜன் நிற்பதாக, போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. கோவை கள்ள
நோட்டு தடுப்பு பிரிவு டி.எஸ்.பி., ராஜேந்திரன் மற்றும் போலீஸார், ஈரோடு
பஸ் ஸ்டாண்டில் கண்காணித்தனர். பைக்கில் பையுடன் வந்த ராஜராஜனை,
சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினர்.அவர் கொண்டு வந்த பையில் ஒரு
லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டு இருந்தது.ராஜராஜன் கைது
செய்யப்பட்டார். அவரிடம் இருந்த கள்ள நோட்டுகள், இரண்டு மொபைல் ஃபோன்,
கத்தி மற்றும் பைக்கை, போலீஸார் பறிமுதல் செய்தனர். ராஜராஜனின் கூட்டாளி
பழனிச்சாமியை போலீஸார் தேடி வருகின்றனர்.


