/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/கூலி உயர்வு பெற்றுத்தாருங்கள் விசைத்தறியாளர்கள் முறையீடுகூலி உயர்வு பெற்றுத்தாருங்கள் விசைத்தறியாளர்கள் முறையீடு
கூலி உயர்வு பெற்றுத்தாருங்கள் விசைத்தறியாளர்கள் முறையீடு
கூலி உயர்வு பெற்றுத்தாருங்கள் விசைத்தறியாளர்கள் முறையீடு
கூலி உயர்வு பெற்றுத்தாருங்கள் விசைத்தறியாளர்கள் முறையீடு
ADDED : ஜூலை 26, 2011 10:33 PM
திருப்பூர் : 'விசைத்தறி துணி உற்பத்திக்கு வழங்கப்படும் கூலியை நூறு சதவீதம் உயர்த்திப் பெற்றுத் தர வேண்டும்,' என, கலெக்டரிடம் விசைத்தறியாளர் சங்க நிர்வாகிகள் மனு கொடுத்தனர்.கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர் சங்க நிர்வாகிகள், கலெக்டர் மதிவாணனிடம் அளித்த மனு:கோவை, திருப்பூர் மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்கங்கள் மற்றும் ஜவுளி உற்பத்தியாளர் சங்கங்கள் இடையே கடந்த 2008ல் கூலி உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
ஒப்பந்தம் ஏற்படுத்தி மூன்றாண்டுகளாகி விட்டது. ஒப்பந்தப்படி மீண்டும் கூலி உயர்வு வழங்க வேண்டும் என்று ஜவுளி உற்பத்தியாளர் சங்கத்திடம் கோரிக்கை விடுத்தோம். இதுவரை எந்த
நடவடிக்கையும் இல்லை.கடந்த மூன்றாண்டுகளில் விசைத்தறி உதிரி பாகங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. விசைத்தறி தொழில் சார்ந்த பல்வேறு சார்பு தொழில்களான அச்சுப்பிணைத்தல், செட் இழை வாங்குதல், தொழிலாளர்களின் சம்பள உயர்வு, டீசல் மற்றும் பெட்ரோல் விலை உயர்வால் அதிகரித்த போக்குவரத்து செலவால் தொழில் நடத்த முடியாமல் சிரமம் ஏற்பட்டுள்ளது.விசைத்தறி தொழிலில் தற்போது தொழிலாளர் பற்றாக்குறை அதிகளவில் உள்ளது. அவர்களுக்கு கணிசமான கூலி உயர்வு வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இத்தொழிலை தொடர்ந்து நடத்த, கூலி உயர்வு வழங்க வேண்டும். ரகம் வாரியாக, 100 சதவீதம் கூலி உயர்வு வழங்க வேண்டும். தொழில் மற்றும் தொழிலாளர் நலன் கருதி, ஜவுளி உற்பத்தியாளர்களை நேரடியாகப் பேச்சுக்கு அழைக்க
வேண்டும். அதற்கான தேதியை மாவட்ட நிர்வாகம் நிர்ணயிக்க வேண்டும், என்று கூறியுள்ளனர்.