/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
ADDED : ஜூலை 26, 2011 10:33 PM
திருப்பூர் : மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி, பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்ததோடு, கடைக்கு அபராதம் விதித்தனர்.
திருப்பூர் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் முரளி கண்ணன் மற்றும் சுகாதார பணியாளர்கள் நேற்று காலை பல்லடம் மற்றும் மங்கலம் ரோடு பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு நடத்தினர். பிளாஸ்டிக் கேரி பேக்குகள், டம்ளர்களை பறிமுதல் செய்தனர். கருவம்பாளையம் பகுதியில் ஒரே கடையில் 15 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் இருந்ததை கண்டுபிடித்து, பறிமுதல் செய்ததோடு, அக்கடை உரிமையாளருக்கு 750 ரூபாய் அபராதம் விதித்தனர். தமிழக அரசு உத்தரவுப்படி, 60 மைக்ரானுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தக் கூடாது; மீறினால் பறிமுதல் செய்வதோடு, 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்தனர். மங்கலம் ரோடு கருவம்பாளையம் பிள்ளையார் கோவில் அருகே ராமஜெயம் என்பவர் மளிகை கடையில், தூத்துக்குடியை சேர்ந்த முத்துராஜ் (12), நாராயணன் (12) ஆகிய சிறுவர்கள் பணியில் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து விசாரித்த அதிகாரிகள், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.