Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/துப்பாக்கி ரோந்துபுறநகரில் குற்றங்களைத்தடுக்கஆயுத திருடர்களை பிடிக்க உத்தரவு

துப்பாக்கி ரோந்துபுறநகரில் குற்றங்களைத்தடுக்கஆயுத திருடர்களை பிடிக்க உத்தரவு

துப்பாக்கி ரோந்துபுறநகரில் குற்றங்களைத்தடுக்கஆயுத திருடர்களை பிடிக்க உத்தரவு

துப்பாக்கி ரோந்துபுறநகரில் குற்றங்களைத்தடுக்கஆயுத திருடர்களை பிடிக்க உத்தரவு

ADDED : ஜூலை 13, 2011 04:10 AM


Google News
மதுரை:''மதுரை மாவட்டத்தில் வழிப்பறி, நகைப்பறிப்பில் ஈடுபடும் 'ஆயுத' திருடர்களை பிடிக்கவும், அவர்களிடமிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளவும், ரோந்து போலீசார் கட்டாயம் துப்பாக்கி எடுத்துச் செல்ல வேண்டும்,'' என அஸ்ராகர்க் எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார்.சமீபகாலமாக புறநகரில் குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளன. நேற்று முன் தினம் இரவுகூட செக்கானூரணியில் தேவராஜ் என்பவர் வீட்டிற்குள் புகுந்த 'மங்கி குல்லா' கொள்ளையர்கள், ஒன்றும் கிடைக்காததால், மனைவி பேச்சியம்மாளின் கழுத்தில் கிடந்த மூன்றரை பவுன் நகையை பறித்துச் சென்றனர். ஜூலை 1ல் மேலூர் புதுச்சுக்கான்பட்டியில் லாரி டிரைவர் தமிழரசன்(32) வீட்டில், முகமூடி கொள்ளையர்கள் 4 பேர், கத்தியால் குத்திவிட்டு, 28 பவுன், ரூ.4 ஆயிரத்தை கொள்ளையடித்தனர்.அதேநாளில் திருமங்கலம் கொடிமங்கலத்தில் வீடுபுகுந்து 4 பவுன் பறிக்கப்பட்டது. ஜூலை 3ல் திருநகரில் சந்திரா(64) என்பவரிடம் 2 பவுன் பறிக்கப்பட்டது. மறுநாள் மேலூர் சந்தைப்பேட்டையில் மோட்டார் கடை ஒன்றில் ரூ.1.60 லட்சம் திருடப்பட்டது.

இதுதவிர, தினமும் ஏதாவது ஒரு பகுதியில் திருட்டு, வழிப்பறி, நகைபறிப்பு நடக்கிறது.மாவட்ட எஸ்.பி., அஸ்ராகர்க் கூறியதாவது :

கடந்தாண்டை விட இந்தாண்டு குற்றங்கள் 10 சதவீதம் குறைந்துள்ளது. சமீபகாலமாக, ஆயுதங்களுடன் வந்து வழிப்பறி, நகைபறிப்பில் ஈடுபடுகின்றனர்.

இதை தடுக்கவும், பாதுகாப்பு கருதியும் ரோந்து போலீசார் கட்டாயம் துப்பாக்கியுடன் செல்ல வேண்டும் என உத்தரவிட்டுள்ளேன். தவிர, புதிதாக 200 இடங்களுக்கு ரோந்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.நிர்வாக காரணங்களுக்காக, ஒரே இடத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றிய 600 போலீசார் வேறு இடங்களுக்கு இடமாற்றப்பட்டுஉள்ளனர். குற்றச்சம்பவங்களுக்கு உடனடியாக எப்.ஐ.ஆர்., போடப்பட்டு, விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளேன். சப்-டிவிஷன் வாரியாக தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த மூன்று மாதங்களில் நிலமோசடி தொடர்பாக 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us