/உள்ளூர் செய்திகள்/சேலம்/நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க கமிஷனர் ஆலோசனைநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க கமிஷனர் ஆலோசனை
நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க கமிஷனர் ஆலோசனை
நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க கமிஷனர் ஆலோசனை
நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க கமிஷனர் ஆலோசனை
ADDED : ஜூலை 13, 2011 03:25 AM
சேலம்: சேலம் மாநகரில் போலீஸ் ஸ்டேஷன்களில், வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என, மாநகர போலீஸ் கமிஷனர் சொக்கலிங்கம் உத்தரவிட்டுள்ளார்.சேலம் மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பது குறித்து, போலீஸ் கமிஷனர் சொக்கலிங்கம் நேற்று போக்குவரத்து போலீஸார் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.அப்போது, போலீஸ் ஸ்டேஷன்களில் பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும். புகார் கொடுக்க வரும் மக்களை அலைக்கழிக்கக் கூடாது, என்று உத்தரவிட்டார்.தொடர்ந்து, வணிக நிறுவனங்கள், பஸ் உரிமையாளர்கள் சங்கம், லாரி உரிமையாளர்கள் சங்கம், பள்ளி கல்லூரி நிர்வாகிகள் உள்ளிட்ட சங்க நிர்வாகிகளிடம் போக்குவரத்து நெரிசலை குறைப்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டார். ஆலோசனையின் போது, துணை போலீஸ் கமிஷனர் பாஸ்கரன், போக்குவரத்து உதவி கமிஷனர் ராதாகிருஷ்ணன், ஆர்.ஐ.,க்கள் இளங்கோவன், சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


