/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/இரு சக்கர வாகன திருட்டை தடுக்க விழிப்புணர்வு தட்டிஇரு சக்கர வாகன திருட்டை தடுக்க விழிப்புணர்வு தட்டி
இரு சக்கர வாகன திருட்டை தடுக்க விழிப்புணர்வு தட்டி
இரு சக்கர வாகன திருட்டை தடுக்க விழிப்புணர்வு தட்டி
இரு சக்கர வாகன திருட்டை தடுக்க விழிப்புணர்வு தட்டி
ADDED : ஜூலை 13, 2011 10:02 PM
திருப்பூர் : திருப்பூரில் தினமும் சராசரியாக 10 இரு சக்கர வாகனங்கள்
திருடப்படுகின்றன.
திருட்டுக்களை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகள்
எடுத்து வருகின்றனர். கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்கள் வீதிகளில்
நிறுத்தப்படுவதையும், திருட்டை தடுக்கும் வகையிலும் விழிப்புணர்வு
ஏற்படுத்தும் வகையில் நோட்டீஸ் அச்சடித்து, வாகனங்களின் முன்பக்க
கண்ணாடிகளில் ஒட்டி வருகின்றனர். அதேபோல், இரு சக்கர வாகன திருட்டை
தடுக்கும் வகையில், வாகனங்கள் நிறுத்தப்படும் முக்கிய இடங்களில்
விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான பிளக்ஸ் தட்டிகள் வைத்து வருகின்றனர்.
அதில், 'இரு சக்கர வாகன ஓட்டிகள் 'வீல் லாக்' மற்றும் 'ரிமோட் லாக்'
பொருத்தி , பாதுகாப்பான இடத்தில் நிறுத்த வேண்டும். அதிகமாக திருடப்படும்
வாகன உரிமையாளர்கள் கவனமாக இருக்க வேண்டும்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.


