/உள்ளூர் செய்திகள்/தேனி/பெரியகுளம் ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் காலியிடங்களை நிரப்ப நடவடிக்கைபெரியகுளம் ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை
பெரியகுளம் ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை
பெரியகுளம் ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை
பெரியகுளம் ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை
ADDED : ஜூலை 13, 2011 10:33 PM
பெரியகுளம் : பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரியில் காலியாக உள்ள டாக்டர்கள் பணியிடங்கள் நிரப்பப்படும் என, கலெக்டர் பழனிசாமி தெரிவித்தார்.
பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் பழனிசாமி ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து, தாலுகா அலுவலத்தில் நோயாளர் நலச்சங்க நிதியிலிருந்து ஆஸ்பத்திரிக்கு தேவையான பொருட்களை 5 லட்சம் ரூபாய்க்கு வாங்குவதற்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. லாசர் எம்.எல்.ஏ., நலப்பணிகள் இணை இயக்குனர் (பொறுப்பு) கருணாகரன், கண்காணிப்பளார் பாபுராகவன், ஆர்.டி.ஓ., அனிதா, தாசில்தார் ரத்தினம்,நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் ஜமால்முகமது உட்பட பலர் கலந்து கொண்டனர். கலெக்டர் பழனிசாமி கூறுகையில், 'மாதம் இருமுறை ஆண், பெண் நோயாளிகளுக்கு சர்க்கரை, ரத்தக்கொதிப்பு மாத்திரைகள் வழங்கப்படும். இதற்கான நேரம் மற்றும் கவுன்டர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். டாக்டர்கள் காலி பணியிடங்களை நிரப்ப ஏற்பாடு செய்யப்படும்', என்றார்.


