ADDED : ஜூலை 14, 2011 12:05 AM
உளுந்தூர்பேட்டை : எலவனசூர்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி சத்துணவு மைய கட்டடத்தை குமரகுரு எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.
உளுந்தூர்பேட்டை அடுத்த எலவனசூர்கோட்டை அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் ரூ.1.44 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக சத்துணவு மைய கட்டடம் கட்டப்பட்டது. கட்டத்தை குமரகுரு எம்.எல்.ஏ., தலைமை தாங்கி திறந்து வைத்து பேசினார். தலைமை ஆசிரியர் சிதம்பரம் வரவேற்றார். முன்னாள் மாவட்ட அவை தலைவர் ராமமூர்த்தி, நிர்வாகிகள் குமார், சேகர், ராஜ்குமார், வையாபுரி, கிருஷ்ண மூர்த்தி, சுப்ராயன், ராமானுஜம், ஞானமூர்த்தி, இப்ராகீம், கேசவன் உட்பட பலர் கலந்து கொண்டனர். உதவி தலைமை ஆசிரியர் தண்டாயுத பாணி நன்றி கூறினார்.


