Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/நில மோசடி புகார் மீது துரித நடவடிக்கை: நெல்லை எஸ்பி., உறுதி

நில மோசடி புகார் மீது துரித நடவடிக்கை: நெல்லை எஸ்பி., உறுதி

நில மோசடி புகார் மீது துரித நடவடிக்கை: நெல்லை எஸ்பி., உறுதி

நில மோசடி புகார் மீது துரித நடவடிக்கை: நெல்லை எஸ்பி., உறுதி

ADDED : ஜூலை 14, 2011 01:17 AM


Google News

திருநெல்வேலி: நெல்லை மாவட்டத்தில் நில மோசடி தொடர்பான புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி., விஜயேந்திர பிதரி தெரிவித்தார்.நெல்லை எஸ்பி., விஜயேந்திர பிதரி நிருபர்களிடம் கூறியதாவது:நெல்லை மாவட்டத்தில் பூட்டிய வீடுகளின் கதவுகளை உடைத்து திருடியதாக முகம்மது ரபீக்கை தனிப்படை போலீசார் கைது செய்ததோடு, 37 பவுன் நகையை பறிமுதல் செய்துள்ளனர்.

இவர் மீது மாவட்டம் முழுவதும் 10 வழக்குள் பதிவு செய்யப்ட்டுள்ளன. இவர் ஊட்டி, திருப்பூர், நாகர்கோவில் உட்பட பல்வேறு மாவட்டங்களிலும் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. கொள்ளையனிடம் தனிப்படையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதோடு, பழைய குற்றங்கள் தொடர்பான ஆணவங்களை சேகரித்து வருகின்றனர்.கந்து வட்டி கேட்டு மிரட்டியதாக மாவட்டத்தில் இதுவரை 55 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 48 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நில மோசடி தொடர்பாக மாவட்டத்தில் இதுவரை 55 புகார்கள் வந்துள்ளன.



இந்த புகார்களை விசாரிக்க ஏடிஎஸ்பி., சொக்கலிங்கம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் நில மோசடி புகார்களில் உண்மையுள்ளதா, சாட்சிகள் விசாரணை, ஆவணங்களை சேகரித்தல் போன்றவற்றை மேற்கொண்டு வருகின்றனர். இதில் நில மோசடி உண்மை என்பது தெரியவந்தால் அரசியல் பிரமுகர், தொழிலதிபர் என யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.பரப்பாடி அருகே கூட்டுறவு பாங்கில் நடந்த கொள்ளை முயற்சியில் உள்ளூர் நபருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் மணல் கொள்ளை தொடர்பாக 400 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தாமிரபரணியில் மணல் அள்ள கோர்ட் தடை விதித்துள்ளது. இதனை மீறி ஆற்றில் மணல் எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு எஸ்பி., விஜயேந்திர பிதரி தெரிவித்தார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us