/உள்ளூர் செய்திகள்/அரியலூர்/திருப்பூர் பனியன் கம்பெனியில் பணியாற்ற மாஜி படைவீரர் குடும்பத்தாருக்கு வாய்ப்புதிருப்பூர் பனியன் கம்பெனியில் பணியாற்ற மாஜி படைவீரர் குடும்பத்தாருக்கு வாய்ப்பு
திருப்பூர் பனியன் கம்பெனியில் பணியாற்ற மாஜி படைவீரர் குடும்பத்தாருக்கு வாய்ப்பு
திருப்பூர் பனியன் கம்பெனியில் பணியாற்ற மாஜி படைவீரர் குடும்பத்தாருக்கு வாய்ப்பு
திருப்பூர் பனியன் கம்பெனியில் பணியாற்ற மாஜி படைவீரர் குடும்பத்தாருக்கு வாய்ப்பு
ADDED : ஜூலை 14, 2011 11:50 PM
அரியலூர்: 'திருப்பூர் பனியன் கம்பெனியில் பணியாற்ற முன்னாள் படைவீரர்கள் குடும்பத்தாருக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது' என்று திருச்சி முன்னாள் படைவீரர்கள் நலன் உதவி இயக்குநர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை: திருப்பூரில் பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடை தயாரிக்க, முன்னாள் படைவீரர்களை சார்ந்த மகளிருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில், இரண்டு மாதம் முதல் மூன்று மாதங்கள் வரை பயிற்சி அளிக்கப்படவுள்ளது. பயிற்சியின் போது தங்கும் இடம் மற்றும் உணவு ஆகியவை இலவமாக வழங்கப்படும். மேலும் பயிற்சியும் இலவசமாக வழங்கபடவுள்ளது. எனவே, திருப்பூர் சென்று பயிற்சி பெற விருப்பம் உள்ள முன்னாள் படைவீரர் மனைவி, மகள், விதவையர் போன்றோர், தங்களது விண்ணப்பத்தை இன்று 15ம் தேதிக்குள், திருச்சியில் உள்ள முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். அதேபோல, பல்வேறு சிறு தொழில்கள் புரிந்திட, முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கு, மாவட்ட நிர்வாகம் மூலம் இரண்டு மாதம் முதல் மூன்று மாதம் வரை பயிற்சி அளிக்கப்படவுள்ளது. பயிற்சியின் போது தங்கும் இடம் மற்றும் உணவு மற்றும் பயிற்சி இலவசமாக வழங்கப்படும். பயிற்சி நிறைவு பெற்றதும் பல்வேறு நிறுவனங்களில் பணியமர்த்தவும் செய்யப்படுவார்கள். இப்பயிற்சியில் சேர்ந்த பயிற்சி பெற விருப்பமுள்ள முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரை சார்ந்தோர்கள், தங்களது விருப்பத்தை விண்ணப்பம் மூலம், இன்று 15ம் தேதிக்குள், திருச்சியில் உள்ள முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.