/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/சான்றிதழ் கிடைக்காமல் மாணவர்கள் அவதிசான்றிதழ் கிடைக்காமல் மாணவர்கள் அவதி
சான்றிதழ் கிடைக்காமல் மாணவர்கள் அவதி
சான்றிதழ் கிடைக்காமல் மாணவர்கள் அவதி
சான்றிதழ் கிடைக்காமல் மாணவர்கள் அவதி
ADDED : ஜூலை 15, 2011 09:58 PM
திருவாடானை : திருவாடானை தாலுகா அலுவலகத்தில் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதால் மாணவ, மாணவிகள் பாதிக்கபட்டுள்ளனர்.
திருவாடானை தாலுகாவில் மாணவர்களுக்கான இருப்பிடம், சாதி, வருமானம் போன்ற சான்றிதழ் கேட்டு தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளனர். பள்ளி துவங்கி இரண்டு மாதமாகியதால் சான்றிதழ்களை சமர்ப்பிக்குமாறு ஆசிரியர்கள் நெருக்கடி கொடுக்கின்றனர். தாலுகா அலுவலகத்தில் மனுக்கள் தேங்கியயுள்ளதால் சான்றிதழ்கள் வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால் அரசு அறிவித்துள்ள சலுகைகள் கிடைக்காதோ, என பெற்றோர்கள் அச்சப்படுகின்றனர். தாசில்தார் தர்மராஜன் கூறும்போது, ''அலுவலர்கள் பற்றாக்குறையால் உடனுக்குடன் சரிபார்க்க முடியவில்லை. மேலும் தினமும் 500 மனுக்கள் வருவதால் சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது'' என்றார்.


