ADDED : ஜூலை 15, 2011 10:09 PM
போடி : போடி ஊராட்சி ஒன்றியம், சில்லமரத்துப்பட்டியில், 525 புதிய குடிநீர் குழாய் இணைப்பு வழங்க அனுமதி பெற்றது.
இதை எதிர்த்து கோர்டில் வழக்கு தொடர்ந்ததால் தற்காலிகமாக புதிய குடிநீர் இணைப்பு வழங்க கோர்ட் தடை விதித்தது. விண்ணப்பித்தவர்கள் ஊராட்சி அனுமதியின்றி தாங்களாகவே குழாய் இணைப்பை பொருத்தி கொண்டனர். இவற்றை நேற்று போலீஸ் பாதுகாப்புடன் அகற்றினர். 50 க்கும் மேற்பட்ட குடிநீர் குழாய் இணைப்புகளை ஊராட்சி நிர்வாகம் துண்டித்தது.


