/உள்ளூர் செய்திகள்/கரூர்/அரசு அமைச்சு பணியாளர் ஒருங்கிணைப்பாளர் கூட்டம்அரசு அமைச்சு பணியாளர் ஒருங்கிணைப்பாளர் கூட்டம்
அரசு அமைச்சு பணியாளர் ஒருங்கிணைப்பாளர் கூட்டம்
அரசு அமைச்சு பணியாளர் ஒருங்கிணைப்பாளர் கூட்டம்
அரசு அமைச்சு பணியாளர் ஒருங்கிணைப்பாளர் கூட்டம்
ADDED : ஜூலை 19, 2011 12:35 AM
கரூர்: தமிழ்நாடு அரசு (டவுன் பஞ்சாயத்து) அமைச்சு பணியாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் கூட்டம் கரூரில் நடந்தது.
கூட்டத்தில் மாநில, மாவட்ட வாரியாக கூட்டம் நடத்தி முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்தல், மாநில சங்கமாக பதிவு செய்து வெப்சைட் தொடங்குதல், டவுன் பஞ்சாயத்துகளில் பணிபுரிந்து வரும் இளநிலை உதவியாளர், வரி தண்டலர் ஆகியோருக்கு பவானிசாகரில் பயிற்சி அளித்தல், பதவிக்குரிய பொறுப்புகளை முழுமையாக வழங்கிட செயலாளர், இயக்குநர், உதவி இயக்குநர் மற்றும் கலெக்டர் ஆகியோருக்கு கோரிக்கை வைத்தல், பழைய ஓய்வு திட்டத்தை கொண்டு வருதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மாநில தலைவர் மாதேஷ், துணை தலைவர் வேலுச்சாமி, பொதுச்செயலாளர் தயாள ராஜகோபாலன், பொருளாளர் சேட்டு, கரூர் மாவட்ட தலைவர் முருகேசன், நிர்வாகிகள் கருப்பையா, தனபாலன், சபரி ராஜன், சுமத்ரா, இளங்கோவன் உள்பட பலர் பங்கேற்றனர்.