/உள்ளூர் செய்திகள்/புதுக்கோட்டை/புதுகையில் மாநாடு கவிஞர்கள் பங்கேற்புபுதுகையில் மாநாடு கவிஞர்கள் பங்கேற்பு
புதுகையில் மாநாடு கவிஞர்கள் பங்கேற்பு
புதுகையில் மாநாடு கவிஞர்கள் பங்கேற்பு
புதுகையில் மாநாடு கவிஞர்கள் பங்கேற்பு
ADDED : ஜூலை 26, 2011 12:44 AM
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் மாநாடு மற்றும் ஓவிய கண்காட்சி நடந்தது.
திருக்கோகர்ணம் வெங்கடேஸ்வரா மெட்ரிக்., பள்ளியில் நடந்த மாநாட்டுக்கு நகரத் தலைவர் தங்கம்மூர்த்தி தலைமை வகித்தார். பொருளாளர் முகம்மது வரவேற்றார். செயலாளர் சஞ்சீவி ஆண்டறிக்கை படித்தார். மாநில துணைத் தலைவர் முத்துநிலவன், மாநிலக்குழு உறுப்பினர் கவிஞர் நீலா, மாவட்டச் செயலாளர் ராமநாதன் மற்றும் கவிஞர்கள் முரளி அப்பாஸ், மதியழகன், சுரேஷ்ராஜன், சுவாதி, பகருதீன், ஷரீப், பாரதி உட்பட பலர் பங்கேற்றனர். மாநாட்டை முன்னிட்டு பள்ளி மாணவர்களின் ஓவியக் கண்காட்சி நடந்தது. இதில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.