/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/கைதிகளுக்கு கையேடு: சார்பு நீதிபதி அறிவிப்புகைதிகளுக்கு கையேடு: சார்பு நீதிபதி அறிவிப்பு
கைதிகளுக்கு கையேடு: சார்பு நீதிபதி அறிவிப்பு
கைதிகளுக்கு கையேடு: சார்பு நீதிபதி அறிவிப்பு
கைதிகளுக்கு கையேடு: சார்பு நீதிபதி அறிவிப்பு
ADDED : ஜூலை 26, 2011 01:38 AM
ஈரோடு: ''சிறை கைதிகளுக்கு, சட்டங்கள் பற்றிய விளக்க கையேடு விரைவில் வழங்கப்படும்,'' என, மாவட்ட சார்பு நீதிபதி ரவீந்திரன் கூறினார்.
ஈரோடு கிளைச்சிறையில், கைதிகளுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது. மாவட்ட சார்பு நீதிமன்ற நீதிபதி ரவீந்திரன் பேசியதாவது: கைதிகளாக சிறைக்கு வருபவர்கள் ஒவ்வொருவரும், இங்கிருந்து வெளியே செல்லும்போது, திருந்திச் செல்ல வேண்டும். உங்களால் சுயமாக வக்கீல் வைத்துக் கொள்ள முடியவில்லை எனில், இலவச சட்ட உதவி மையத்தை வழக்குகளை நடத்திக்கொள்ளலாம். வருங்காலத்தில் தவறுகள் செய்யாமல் இருக்கவே தண்டனை வழங்கப்படுகிறது. கைதிகளுக்கு, சட்டங்கள் பற்றிய விளக்க கையேடு வழங்க ஏற்பாடு செய்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். விரைவு நீதிமன்ற நீதிபதி செல்வம் ஜேசுராஜா, ஜே.எம்.2 மாஜிஸ்திரேட் ராஜமாணிக்கம், இலவச சட்ட உதவி வக்கீல் திவாகர் ஆகியோர் பேசினர். சிறை கண்காணிப்பாளர் கருப்பையா, போலீஸ்காரர் சுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர்.


