/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மாணவர்கள் விசா பெறுவது எப்படி? : அமெரிக்க துணை தூதரக அதிகாரிகள் விளக்கம்மாணவர்கள் விசா பெறுவது எப்படி? : அமெரிக்க துணை தூதரக அதிகாரிகள் விளக்கம்
மாணவர்கள் விசா பெறுவது எப்படி? : அமெரிக்க துணை தூதரக அதிகாரிகள் விளக்கம்
மாணவர்கள் விசா பெறுவது எப்படி? : அமெரிக்க துணை தூதரக அதிகாரிகள் விளக்கம்
மாணவர்கள் விசா பெறுவது எப்படி? : அமெரிக்க துணை தூதரக அதிகாரிகள் விளக்கம்
கோவை : மேல்படிப்புக்காக வெளிநாடு செல்லும்போது, விசா பெறுவதற்கு மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து, அமெரிக்க தூதரக அதிகாரிகள், கோவை மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
துணை தூதரக அதிகாரிகள் சரா கே கிளைமர், கேத்தரின் இ ரீடி தலைமை வகித்தனர். பலரும் வெளிநாடு செல்ல விசா பெறுவதற்காக விண்ணப்பிக்கும் போது, போதிய சான்றிதழ்கள் இடம்பெறாததால் எளிதாக விசா கிடைப்பதில்லை. குறிப்பிட்ட காலத்தில் விசா கிடைக்காததால் பல்வேறு இடையூறுகளை சந்திக்க வேண்டியுள்ளது. மாணவர்கள் மேல்படிப்புக்காக விசா பெற விண்ணப்பிக்கும்போது, கட்டாயமாக குறிப்பிட்ட கல்லூரி, பல்கலையின் அனுமதி கடிதம், சேர்க்கை கட்டணம் செலுத்திய ரசீது உள்ளிட்ட சான்றிதழ்கள் இடம்பெற வேண்டும். விசா பெற முதலில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். பின், தூதரகத்திடம் நேரில் சந்திக்க முன் அனுமதி பெற வேண்டும். குறிப்பிட்ட நாளில் கட்டாயமாக தூதரகத்துக்கு செல்ல வேண்டும்,' என வலியுறுத்தப்பட்டது.
தொடர்ந்து, மாணவர் மற்றும் கல்வி விசா, பணி விசா, வணிக விசா, அமெரிக்க குடியுரிமை சர்வீஸ், வேற்று நாட்டில் குடிபுகுந்தவருக்கான விசா உட்பட பல்வேறு தகவல் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அப்போது, மாணவர்கள் தங்களின் சந்தேங்களை தெரிவித்து நிவர்த்தி செய்து கொண்டனர். மதியம் அவிநாசி ரோட்டிலுள்ள ஜி.ஆர்.டி., கல்லூரியில் மாணவர் மற்றும் கல்வி விசா, வணிக விசா பெறும் வழிமுறைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. வரும் 29ம் தேதி மதுரையில் பாத்திமா கல்லூரி மற்றும் காமராஜர் ரோட்டிலுள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக வளாகத்தில் விழிப்புணர்வு கூட்டம் நடக்கிறது.


