15 வயதில் திருமணம் 17 வயதில் தற்கொலை
15 வயதில் திருமணம் 17 வயதில் தற்கொலை
15 வயதில் திருமணம் 17 வயதில் தற்கொலை
ADDED : ஜூலை 28, 2011 01:05 AM
திருநெல்வேலி : 15வயதில் திருமணம் செய்துகொண்ட சிறுமி 17 வயதில் தற்கொலை செய்துகொண்டார்.
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே சவுந்திரலிங்கபுரத்தை சேர்ந்த சுயம்பு மகள் இந்துஜா(17). இவர் 2009ல் எட்டாம் வகுப்பு படித்தார். ஒன்பதாம் வகுப்பு படிக்க அனுப்பாத பெற்றோர், அதே ஊரில் உள்ள உறவுக்காரர் பால்துரை என்பவருக்கு திருமணம் செய்துவைத்தனர். 3 மாதங்களில் இந்துஜா பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டார்.
தன்னை ஒன்பதாம் வகுப்பில் சேர்த்துவிடுமாறு தெரிவித்தார். ஆனால் பெற்றோர் மறுத்தனர். கணவர் வீட்டுக்கு அனுப்ப முயற்சித்தனர். இதனால் இந்துஜா நேற்று விஷம் குடித்தார். திருவனந்தபுரம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் இறந்தார். திருவனந்தபுரம் ஆர்.டி.ஓ.,விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.


