Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/நாய்கள் கடித்து குதறின பெண் புள்ளிமான் பலி

நாய்கள் கடித்து குதறின பெண் புள்ளிமான் பலி

நாய்கள் கடித்து குதறின பெண் புள்ளிமான் பலி

நாய்கள் கடித்து குதறின பெண் புள்ளிமான் பலி

ADDED : ஜூலை 28, 2011 01:52 AM


Google News

திருநெல்வேலி : நெல்லை அருகே நாய்கள் கடித்து குதறிய பெண் புள்ளிமான் பரிதாபமாக இறந்தது.நெல்லை அருகே அபிஷேகப்பட்டி வனப்பகுதியில் இருந்து நேற்று மாலை ஒரு வயது மதிக்கதக்க பெண் புள்ளிமான் அபிஷேகப்பட்டி ரோட்டை கடக்க முயன்றது.அப்போது நாய்கள் மானை நீண்ட தூரம் துரத்தி சென்று கடித்து குதறின.

இதனையறிந்த அப்பகுதி மக்கள் நாய்களை, விரட்டி விட்டு உயிருக்கு போராடிய மானை மீட்டு டவுன் ஸ்ரீபுரம் கால்நடை ஆஸ்பத்திரிக்கு எடுத்து வந்தனர்.கால்நடை டாக்டர் பாரதி, புள்ளிமானை பரிசோதனை செய்த போது, மான் இறந்தது தெரிய வந்தது. இறந்த புள்ளிமானை பரிசோதனை செய்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.அடிக்கடி பலியாகும் மான்கள்நெல்லை அபிஷேகப்பட்டி, ராமையன்பட்டி வனப்பகுதியில் பல்வேறு வகையான மான்கள் வசித்து வருகின்றன.



இதில் ஒரு சில மான்கள் தண்ணீருக்காகவும், இரைதேடியும் ஊருக்குள் புகுவது வழக்கமாக உள்ளது. இத்தகைய மான்கள் வனப்பகுதியில் ரோட்டை கடக்கும் போது, வேகமாக வரக்கூடிய வாகனங்கள் மோதி இறக்கின்றன. இதுதவிர நாய்களும் மான்களை கடித்து குதறுகின்றன. இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. எனவே வனத்துறையினர் வனப்பகுதியில் குறைந்த மின் அழுத்தம் கொண்ட சோலார் மின் வேலிகளையோ அல்லது அகழிகளையோ ஏற்படுத்தி ஊருக்குள் மான்கள் புகுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன உயிரின ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us