ADDED : ஜூலை 28, 2011 09:05 PM
உடுமலை : உடுமலை அமராவதி நகர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், டெங்கு காய்ச்சல் நோய் எதிர்ப்பு விழிப்புணர்வு கூட்டம் மருத்துவ அலுவலர் தலைமையில் நடந்தது.
கொசுக்களினால், பரவும் டெங்கு காய்ச்சல், மலேரியா, சிக்-குன்-குன்யா, யானைக்கால் நோய் குறித்தும்; கிராமங்களில்,நோய் பரவும் விதம் மற்றும் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விளக்கப்பட்டது. பொதுமக்கள் திறந்த வெளியில் தண்ணீர் தேங்காமல் பாதுகாக்கவும், நீர் சேமிக்கும் கலன்களை கொசு நுழையாதபடி மூடி வைக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. அமராவதி நகர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி நடந்தது. மாணவர்களுக்கு கட்டுரை, வினாடி வினா போட்டிகள் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர்கள் செய்தனர்.


