நில மோசடி: தி.மு.க., கவுன்சிலர் கைது
நில மோசடி: தி.மு.க., கவுன்சிலர் கைது
நில மோசடி: தி.மு.க., கவுன்சிலர் கைது
ADDED : ஆக 07, 2011 12:56 AM
வேளச்சேரி : வேளச்சேரியில், பெண் வழக்கறிஞர் ஒருவரின் நிலத்தை அபகரித்த, பெருங்குடி தி.மு.க., கவுன்சிலர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.
வேளச்சேரியைச் சேர்ந்த, வழக்கறிஞர் கலாஜெயச்சந்திரன். இவருக்கு, புவனேஸ்வரிநகரில் சொந்த நிலம் உள்ளது. அதில், மதில்சுவர் கட்டியிருந்தார். பெருங்குடி பேரூர் கழகச் செயலரும், ஒன்பதாவது வார்டு கவுன்சிலருமான ரவிச்சந்திரன் என்பவர் தனது கூட்டாளி, தண்டீஸ்வரம் நகரைச் சேர்ந்த மெகபூப் மற்றும், 10 அடியாட்களுடன் சேர்ந்து கலாஜெயச்சந்திரன் இடத்தில் கட்டியிருந்த மதில்சுவரை அகற்றி, நில ஆக்கிரமிப்பு செய்திருந்தார்.இது தொடர்பாக, கலாஜெயச்சந்திரன் போலீசில் புகார் செய்தார். இது குறித்து, வேளச்சேரி இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினார். இதில், ரவிச்சந்திரன் தனது கூட்டாளிகளுடன், நிலத்தை அபகரித்தது தெரியவந்தது. இதையடுத்து, ரவிச்சந்திரன் மற்றும் மெகபூப் ஆகியோரை நேற்று கைது செய்தனர்.இவ்வழக்கில் சம்பந்தப்பட்டு தலைமறைவாக உள்ள, 10 பேரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். தி.மு.க., கவுன்சிலர் ரவிச்சந்திரன் கடந்த சில நாட்களுக்கு முன், நிலமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


