/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/குற்றாலம் டவுன் பஞ்.,கவுன்சிலர் நீக்கம் செல்லாது; நெல்லை கோர்ட் தீர்ப்புகுற்றாலம் டவுன் பஞ்.,கவுன்சிலர் நீக்கம் செல்லாது; நெல்லை கோர்ட் தீர்ப்பு
குற்றாலம் டவுன் பஞ்.,கவுன்சிலர் நீக்கம் செல்லாது; நெல்லை கோர்ட் தீர்ப்பு
குற்றாலம் டவுன் பஞ்.,கவுன்சிலர் நீக்கம் செல்லாது; நெல்லை கோர்ட் தீர்ப்பு
குற்றாலம் டவுன் பஞ்.,கவுன்சிலர் நீக்கம் செல்லாது; நெல்லை கோர்ட் தீர்ப்பு
ADDED : ஆக 13, 2011 01:26 AM
தென்காசி : குற்றாலம் டவுன் பஞ்.,8வது வார்டு கவுன்சிலரை பதவி நீக்கம்
செய்தது செல்லாது என நெல்லை கோர்ட் தீர்ப்பு கூறியுள்ளது.
குற்றாலம் டவுன்
பஞ்.,சில் 8 வார்டுகள் உள்ளன. 8வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் வக்கீல்
குமார் பாண்டியன். இவர் குற்றாலம் அ.தி.மு.க.செயலாளராகவும் இருக்கிறார்.
டவுன் பஞ்.,தலைவராக தி.மு.க.வை சேர்ந்த ரேவதி இருக்கிறார். குற்றாலம் டவுன்
பஞ்.,சில் கடந்த 2010ம் ஆண்டு ஏப்.26ம் தேதி, மே 19ம் தேதி, ஜூன் 28ம்
தேதி நடந்த கூட்டங்களில் கவுன்சிலர் குமார் பாண்டியன் கலந்து கொள்ளவில்லை.
இதற்கு விளக்கம் கேட்டு டவுன் பஞ்.,நிர்வாக அதிகாரி கவுன்சிலர்
குமார்பாண்டியனுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இதற்கு உரிய விளக்கத்தை
கவுன்சிலர் எழுத்து மூலமாக அளித்துள்ளார். ஆனால் இதனை டவுன் பஞ்.,நிர்வாக
அதிகாரி ஏற்க மறுத்து விட்டார். கடந்த 30.8.2010 அன்று நடந்த குற்றாலம்
டவுன் பஞ்.,கூட்டத்தில் கவுன்சிலர் குமார் பாண்டியனை பதவி நீக்கம் செய்து
தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுபற்றிய தகவல் உடனடியாக சம்பந்தப்பட்ட
கவுன்சிலருக்கு தெரியப்படுத்தப்படவில்லை. இதனால் தனது நிலை குறித்து
குமார்பாண்டியன் நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
குற்றாலம் டவுன் பஞ்.,நிர்வாகம் அதன் பின்னரே கவுன்சிலர் நீக்கப்பட்டது
பற்றி கூறியுள்ளது. நீதிபதி வழக்கை விசாரணை செய்து கவுன்சிலர் பதவி நீக்கம்
செய்ததற்கு இடைக்கால தடை விதித்தார். ஆனால் இதனை குற்றாலம் டவுன்
பஞ்.,நிர்வாகம் ஏற்று மன்ற கூட்டங்களில் பங்கேற்க குமார்பாண்டியனுக்கு
அழைப்பு விடுக்கப்படவில்லை. இதனால் குமார்பாண்டியன் மதுரை சென்னை ஐகோர்ட்
கிளையில் ரிட் மனு தாக்கல் செய்து தானே கோர்ட்டில் ஆஜராகி வாதாடினார்.
டவுன் பஞ்.,கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதிக்க கோர்ட் உத்தரவிட்டது.
இதனையடுத்து நடந்த குற்றாலம் டவுன் பஞ்.,கூட்டங்களில் கவுன்சிலர்
குமார்பாண்டியன் கலந்து கொண்டார். இந்நிலையில் நெல்லை கூடுதல் மாவட்ட
கோர்ட்டில் நடந்த வழக்கில், கவுன்சிலர் குமார்பாண்டியனை பதவி நீக்கம்
செய்தது செல்லாது என நீதிபதி சேதுமாதவன் தீர்ப்பு கூறியுள்ளார்.
இவ்வழக்கில் மனுதாரர் சார்பில் வக்கீல் கபிரியேல்ராஜ் ஆஜரானார். குற்றாலம்
மெயின் அருவியில் உற்சாக குளியல் நடத்திய சுற்றுலா பயணிகள்.


