சோனியா, ஜெ., பற்றி அவதூறு பேச்சு தி.மு.க., பேச்சாளர் சிறையில் அடைப்பு
சோனியா, ஜெ., பற்றி அவதூறு பேச்சு தி.மு.க., பேச்சாளர் சிறையில் அடைப்பு
சோனியா, ஜெ., பற்றி அவதூறு பேச்சு தி.மு.க., பேச்சாளர் சிறையில் அடைப்பு
ADDED : ஆக 18, 2011 12:49 AM
நாகர்கோவில் : காங்., தலைவர் சோனியா, முதல்வர் ஜெயலலிதா பற்றி அவதூறு
பேசியதாக கைது செய்யப்பட்ட தி.மு.க., பேச்சாளர், பாளை., சிறையில்
அடைக்கப்பட்டார்.
மூன்று வாரங்களுக்கு முன், களியக்காவிளையில் நடந்த
பொதுக்கூட்டத்தில், தி.மு.க., பேச்சாளர் வாகை முத்தழகன், சோனியா, ஜெயலலிதா
பற்றி அவதூறாக பேசினார். சோனியா பற்றி பேசியதற்கு காங்கிரஸ் தரப்பில் கடும்
எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, முத்தழகன், தி.மு.க.,வின்
அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இப்பகுதி
அ.தி.மு.க., பொறுப்பாளர் உதயகுமாரை மிரட்டியதாக போலீசில் புகார் செய்தார்.
அவரை கைது செய்த களியக்காவிளை போலீசார், கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்.
பின்னர், அவர் பாளை., சிறையில் அடைக்கப்பட்டார்.