பாக்கித் தொகை: கோ-ஆப் டெக்ஸ் கைவிரிப்பு : நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் தவிப்பு
பாக்கித் தொகை: கோ-ஆப் டெக்ஸ் கைவிரிப்பு : நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் தவிப்பு
பாக்கித் தொகை: கோ-ஆப் டெக்ஸ் கைவிரிப்பு : நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் தவிப்பு
விருதுநகர் : நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு, கோ-ஆப் டெக்ஸ் தர வேண்டிய பாக்கித் தொகை, அரசு வழங்கினால் தான் தர முடியும் என, கை விரித்ததால் நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் தவித்து வருகின்றன.
இது குறித்து, கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு பணம் கிடைக்காத நிலையில், நெசவாளர்களுக்கு கூலித்தொகையும், கூட்டுறவு வங்கிகளில் பெற்ற காசுக் கடன்களை, திரும்பச் செலுத்த முடியாத நிலையில் உள்ளன. காசுக் கடன்களுக்கு, வட்டித்தொகை அதிகரித்து வருகிறது. இந் நிலையில், கோ-ஆப் டெக்ஸ் நிறுவனமோ, எங்களுக்கு அரசிடமிருந்து பணம் வரவில்லை, வந்தவுடன் பணம் செலுத்துவதாகத் தெரிவித்துள்ளது. கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்கள், இலவச வேட்டி,சேலை, சீருடை உற்பத்தியைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அரசு நடவடிக்கை எடுத்து, கைத்தறி கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க வேண்டிய தொகையை, உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.