/உள்ளூர் செய்திகள்/மதுரை/சிறு, குறுந்தொழில் நிறுவனங்களுக்கு சலுகை : ரூ.10 லட்சம் வரை வட்டி மானியம்சிறு, குறுந்தொழில் நிறுவனங்களுக்கு சலுகை : ரூ.10 லட்சம் வரை வட்டி மானியம்
சிறு, குறுந்தொழில் நிறுவனங்களுக்கு சலுகை : ரூ.10 லட்சம் வரை வட்டி மானியம்
சிறு, குறுந்தொழில் நிறுவனங்களுக்கு சலுகை : ரூ.10 லட்சம் வரை வட்டி மானியம்
சிறு, குறுந்தொழில் நிறுவனங்களுக்கு சலுகை : ரூ.10 லட்சம் வரை வட்டி மானியம்
ADDED : ஆக 28, 2011 12:38 AM
மதுரை : வங்கிகளில் கடன் பெற்று தொழில் செய்யும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் முறையாக வட்டி செலுத்தினால், வட்டி மானியம் வழங்கப்படுகிறது.
நிறுவனத்தை மேம்படுத்த மற்றும் நவீனதொழில்நுட்பம் கொண்ட இயந்திரங்களை நிறுவியதற்காக கடன் பெற்றவர்கள், பிணைய சொத்து இல்லாமல் 'கிரடிட் கேரன்டி' முறையில் கடன் பெற்றவர்கள் வட்டி மானியம் பெறலாம். மத்திய அரசின் கடன் உத்தரவாதத்துடன் இணைந்த முதலீட்டு மானிய திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்படுகிறது. வட்டி செலுத்தியதற்கான விவரங்களை வங்கியில் தெரிவித்து, அலுவலரிடமிருந்து அதற்கான சான்றிதழை, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பெறவேண்டும். இந்த ரசீதுடன், மாவட்ட தொழில் மையத்திற்கு சென்று, வட்டி மானியத்திற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். வங்கிகள் மூலம் ஒரு கோடி ரூபாய் வரை கடன்பெற்ற, கடன்பெறும் நிறுவனங்களுக்கு, வட்டி செலுத்திய பின், மூன்று சதவீத வட்டி மானியம் தரப்படுகிறது. ஒவ்வொரு நிறுவனத்திற்கும், அதிகபட்சமாக, ஐந்தாண்டுகளில் ரூ.10 லட்சம் வரை வட்டி மானியம் கிடைக்கும். நிறுவனங்கள், அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாவட்ட தொழில் மையத்தை அணுகலாம். மதுரை முகவரி: மாவட்ட தொழில் மையம், அழகர்கோவில் ரோடு, மதுரை, போன்: 0452 - 253 7621.


