/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/சிவத்தையாபுரத்தில் விஜயகாந்த் பிறந்தநாள் விழா : பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரம் பரிசுசிவத்தையாபுரத்தில் விஜயகாந்த் பிறந்தநாள் விழா : பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரம் பரிசு
சிவத்தையாபுரத்தில் விஜயகாந்த் பிறந்தநாள் விழா : பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரம் பரிசு
சிவத்தையாபுரத்தில் விஜயகாந்த் பிறந்தநாள் விழா : பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரம் பரிசு
சிவத்தையாபுரத்தில் விஜயகாந்த் பிறந்தநாள் விழா : பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரம் பரிசு
ADDED : ஆக 28, 2011 01:05 AM
சாயர்புரம் : சாயர்புரம் நகர தேமுதிக.,சார்பில் சிவத்தையாபுரத்தில் நடந்த விஜயகாந்த் பிறந்தநாள் விழாவில் அன்று பிறந்த குழந்தைக்கு தங்கமோதிரம் பரிசாக வழங்கப்பட்டது.
சாயர்புரம் நகர தேமுதிக.,சார்பில் விஜயகாந்த் பிறந்தநாள் விழா சாயர்புரம் மற்றும் சிவத்தையாபுரம் பகுதிகளில் கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு சாயர்புரம் நகர தேமுதிக.,செயலாளர் ராஜேந்திரன் தலைமை வகித்து சிவத்தையாபுரம் அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்தில் அன்று பிறந்த ஆண் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசாக வழங்கினார். தொடர்ந்து சிவத்தையாபுரம் சாலையில் தேமுதிக.,வினர் கொடியேற்றினார். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. முன்னதாக பிரமையாபுரத்தை சேர்ந்த முத்துமாரி என்பவருக்கு இலவச தையல் மிஷின் வழங்கப்பட்டது. மேலும் இன்ஜினியரிங் கல்வி பயிலும் மாணவி சாந்தபாரதிக்கு உதவி தொகை ரூ.5 ஆயிரமும், மாணவி சுஹாசினிக்கு உதவி தொகை ரூ.3 ஆயிரமும் வழங்கப்பட்டது. விழாவில் சாயர்புரம் நகர தலைவர் மால்குணதுரை, நகர துணை செயலாளர்கள் சரவணன், நாகராஜன், பொருளாளர் சுரேந்திரன், நகர இளைஞரணி செயலாளர் சாந்தசீலன், நகர மாணவரணி செயலாளர் ராஜா, மகளிரணி செயலாளர்கள் பிச்சலதா, பால்ரதி, உறுப்பினர்கள் இன்பராஜ், காளிதாஸ், சேர்மநாதன், மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


