Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/மக்களை தேடி சென்று குறைகளை போக்க வேண்டும்: கலெக்டர் விருப்பம்

மக்களை தேடி சென்று குறைகளை போக்க வேண்டும்: கலெக்டர் விருப்பம்

மக்களை தேடி சென்று குறைகளை போக்க வேண்டும்: கலெக்டர் விருப்பம்

மக்களை தேடி சென்று குறைகளை போக்க வேண்டும்: கலெக்டர் விருப்பம்

ADDED : செப் 01, 2011 11:24 PM


Google News

தர்மபுரி: ''மக்களை தேடி சென்று குறைகளை போக்க வேண்டும்,'' என கலெக்டர் பேசினார்.

பென்னாகரம் தாலுகா சுஞ்சல்நத்தம் உள்வட்டம் ஏமனூர் கிராமத்தில் நடந்த மக்கள் தொடர்பு முகாமுக்கு, டி.ஆர்.ஓ., கணேஷ், சப்-கலெக்டர் மரியம் சாதிக், மாவட்ட திட்ட அலுவலர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை வகித்து, கலெக்டர் லில்லி பேசியதாவது: தர்மபுரி மாவட்டத்தில் போக்குவரத்து வசதியில்லாத மலைக்கிராமங்களில் வசிக்கும் மக்களின் அடிப்படை தேவைகளை அவர்களின் வசிப்பிடங்களுக்கு சென்று நிறைவேற்றும் வகையில் இந்த முகாம் நடத்தப்படுகிறது. அரசு அலுவலர்கள் ஏமனூர் கிராமத்துக்கு வருவதற்கு மிகுந்த சிரமமாக இருந்தது. அதே போல் இங்குள்ள பொதுமக்கள் உங்கள் அலுவலங்களை தேடி வருவதற்கு மிகுந்த சிரப்படுவார்கள். அவர்களின் குறைகளை போக்க நீங்களே நேரில் செல்ல வேண்டும்.



அப்போது தான் கிராம மக்களின் சிரமங்கள் உங்களுக்கு புரியும். இந்த கிராமத்தில் உள்ள அடிப்படை பிரச்னைகள், குடிநீர் வசதி, குறைந்த மின் அழுத்தம், புதிய ரேஷன் கார்டு வழங்குதல் ஆகியவை விரைவில் நிறைவேற்றப்படும். மீனவர்களுக்கு தொகுப்பு வீடுகள் வழங்குவதற்கு துறை அலுவலர்களுடன் கலந்து பேசி தீர்வு காணப்படும். இவ்வாறு அவர் பேசினார்.



விதவை உதவித்தொகை 10 பேருக்கும், விவசாய உதவித்தொகை 28 பேருக்கும், இறப்பு நிவாரண உதவி தொகை மூன்று பேருக்கும், இலவச தையல் மிஷின் ஒன்பது பேருக்கும், மூன்று விவசாயிகளுக்கு மானிய விலையில் காய்கறி விதைகளும், ஐந்து விவசாயிகளுக்கு மானிய விலையில் உரங்களும், மாற்று திறனாளிகள் மூன்று பேருக்கு இலவச மூன்று கர øகிள் உள்ளிட்ட 46 லட்சத்து 25 ஆயிரத்து 800 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. தனித்துணை ஆட்சியர் மோகன்ராஜ், பென்னாகரம் யூனியன் சேர்மன் திரவுபதி செல்வம், நாகமரை பஞ்சாயத்து தலைவர் இளங்கோவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us