/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/மஞ்சள் பயிருக்கு மேலுரம் வேளாண் துறை ஆலோசனைமஞ்சள் பயிருக்கு மேலுரம் வேளாண் துறை ஆலோசனை
மஞ்சள் பயிருக்கு மேலுரம் வேளாண் துறை ஆலோசனை
மஞ்சள் பயிருக்கு மேலுரம் வேளாண் துறை ஆலோசனை
மஞ்சள் பயிருக்கு மேலுரம் வேளாண் துறை ஆலோசனை
ADDED : செப் 01, 2011 11:25 PM
தர்மபுரி: 'பென்னாகரம் பகுதியில், சாகுபடி செய்யப்பட்டுள்ள மஞ்சள் பயிருக்கு மேலுரம் இட வேண்டும்' என, வேளாண் துறை அறிவுரை வழங்கியுள்ளது.
தோட்டக்கலை உதவி இயக்குனர் முகுந்தன் வெளியிட்ட அறிக்கை: பென்னாகரம் தாலுகாவில் 3 ஆயிரம் ஏக்கரில் மஞ்சள் பயிர் பரவலாக சாகுபடி செய்யப்பட்டு, தற்போது, மூன்று மாத பயிராக உள்ளது.
கடந்த ஒரு வாரமாக வானம் மேக மூட்டத்துடன் சில நாட்கள் மழை பெய்து வருகிறது. இதனால், சிபாரிசுபடி அடியுரம் மற்றும் மேலுரம் இடாத மஞ்சள் நிறத்துடன் காணப்படுகின்றன. இதற்கு மண்ணில் இலைகள், வெளிர் பச்சை, இளம் மஞ்சள் நிறத்துடன் காணப்படும். இதற்கு மண்டில் போதிய அளவு சத்துக்கள் இல்லாமல், பற்றாக்குறையாக உள்ளதே காரணமாகும். எனவே மஞ்சள் பயிருக்கு மேலுரம் இகுட வேண்டியது அவசியமாகும். மஞ்சள் பயிருக்கு நடவு செய்த ஒரு மாதத்தில் இருந்து ஐந்து மாதம் வரை ஒவ்வொறு மாத இடைவெளியிலும் மேலுரம் இட சிபாரிசு செய்யப்படுகிறது.
மூன்று மாத பயிராக உள்ள மஞ்சள் பயிருக்கு ஒரு ஏக்கருக்கு 25 கிலோ யூரியா உரத்துடன் 15 கிலோ பெட்டாஷ் உரத்தினை நன்கு கலந்து பார்களின் ஒரங்களில் மண்ணில் போதிய ஈரம் உள்ள போது இட வேண்டும். இதே போல் மஞ்சள் நட்ட 120வது மற்றும் 150வது நாட்களில் மேற்குறிப்பிட்ட அளவு யூரியா மற்றும் பொட்டாஷ் உரங்களை மேலுரமாக இட்டு நீர் பாசனம் செய்ய வேண்டும்.
* இலை வழியாக நுண்ணூட்ட சத்து உர கரைசல் தெளித்தல்: மஞ்சள் பயிர்களின் வளர்ச்சிக்கு நுண்ணூட்ட சத்து உரங்களும் தேவைப்படுகின்றன. நுண்ணுட்ட சத்து உரங்களில் பற்றாக்குறையால் மஞ்சள் பயிர்களில் இலைகள், வெளிர் மஞ்சள் நிறாக மாறி காணப்படும்.
இக்குறையை போக்கிட 10 லிட்டர் நல்ல நீரில் ஆறு கிலோ சூப்பர் பாஸ்பேட் உரத்தினை நன்கு கலந்து ஒர் இரவு முழுவதும் ஊற விட்டு வைத்திருக்க வேண்டும். அடுத்த நாள் அக்கரைசலை வடிகட்டி எடுத்து கொள்ள வேண்டும். வடிகட்டிய கரைசலில் 150 கிராம இரும்பு சல்பேட் (அன்னபேதி உப்பு) 150 கிராம துத்தநாக சல்பேட், 150 கிராம போரக்ஸ், 150 கிராம் போரக்ஸ், 150 கிராம் மக்னிசியம் சல்பேட் மற்றும் 150 கிராம் யூரிய ஆகியவற்றை நன்கு கலந்து அக்கரைசலை 100 லிட்டர் பெருமளவுக்கு நல் நீரை சேர்த்து கலக்கி கரைசலை தயாரிக்க வேண்டும். இவ்வாறு தயாரித்த கரைசலை மாலை வேளையில் மண்ணில் போதிய ஈரம் உள்ள போது மஞ்சள் பயிர் இலைகள் மீது நன்குபடும்படி கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். சிபாரிசு செய்த அளவுக்கு மேல் நுண்ணூட்ட சத்து உரங்களை குறிப்பிட்ட அளவுகள் கரைசலில் சேர்க்க கூடாது. இதே போன்று மீண்டும் ஒரு முறை 20 நாள் இடைவெளியில் நுண்ணூட்ட சத்து உரங்களில் கரைசலை இலை வழி மூலம் தெளிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு தங்கள் பகுதி தோட்டக்கலை துறை அலுவலர்களை அணகலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


