துருக்கியில் இருந்து இஸ்ரேல் தூதர் வெளியேற்றம்
துருக்கியில் இருந்து இஸ்ரேல் தூதர் வெளியேற்றம்
துருக்கியில் இருந்து இஸ்ரேல் தூதர் வெளியேற்றம்
UPDATED : செப் 03, 2011 08:45 AM
ADDED : செப் 03, 2011 07:09 AM
அங்காரா: இஸ்ரேல் தூதரை உடனடியாக வெளியேறுமாறு துருக்கி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த ஆண்டு காஸா பகுதியில் சென்று கொண்டிருந்த துருக்கி அரசுக்கு சொந்தமான கப்பல் மீது இஸ்ரேல் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இச்சம்பவத்திற்கு துருக்கி அரசு கண்டனம் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் இஸ்ரேல்அரசு மன்னிப்பு கோர வலியுறுத்தியது. இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த இஸ்ரேல் அரசு மன்னிப்பு கோராமல் காலம் கடத்தி வந்தது. இதனையடுத்து துருக்கி வெளியுறவுத்துறை அமைச்சர் அகமது டாவூடோக்லு வெளி யிட்டுள்ள அறிக்கையில் தூதரகத்தில் உள்ள இரண்டாம் கட்ட அதிகாரிகளை தவிர உயர் மட்ட அதிகாரிகள் உடனடியாக வெளியேற உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.


